உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: ​மாநக​ராட்சி சார்​பில் உலக சுற்​றுச்​சூழல் தினத்தை முன்​னிட்டு 5 லட்​சம் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று தொடங்​கியது. உலக சுற்​றுச்​சூழல் தினத்தை முன்​னிட்​டு, மாநக​ராட்சி சார்​பில் பொது இடங்​களில் 5 லட்​சம் மரக்​கன்​றுகள் நடும் பணி நேற்று தொடங்​கியது.

குறிப்​பாக பூங்​காக்கள், மாநக​ராட்​சிக்கு சொந்​தமான இடங்​கள், பள்ளி வளாகங்கள், திறந்​தவெளி இடங்​கள், நீர்​நிலைப் பகு​தி​கள், குடி​யிருப்​புப் பகு​தி​கள், மருத்​து​வமனை வளாகங்​கள், நகர்ப்​புற வாழ்விட மேம்​பாட்டு வாரிய வளாகப் பகு​தி​கள், விளை​யாட்​டுத் திடல்​கள், மயானபூமிப் பகு​தி​கள், கடற்​கரைப் பகு​தி​கள் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் 5 லட்​சம் மரக்​கன்​றுகள் நடப்பட உள்​ளன.

இதன் ஒரு பகு​தி​யாக, மேயர் ஆர்​.பிரி​யா, பி.கே.சேகர்​பாபு எம்​எல்ஏ ஆகியோர், ராயபுரம் மண்​டலம், பிர​காசம் சாலை​யில் உள்ள ஸ்ரீரா​முலு பூங்​கா​வில் மரக்​கன்​றுகளை நட்​டனர்.

தொடர்ந்​து, திரு.​வி.க. நகர் மண்​டலம், 75-வது வார்​டு, ஓட்​டேரி லிங்க் சாலை​யில் உள்ள மூலிகைப் பூங்கா வளாகத்​தில் மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​. சமீரன், சோழிங்​கநல்​லூர் மண்​டலம், 199-வது வார்​டு, சத்​தி​ய​வாணி முத்து தெரு​வில் உள்ள மாநக​ராட்சி நீருறிஞ்​சும் பூங்​கா​வில் பி.சர​வணன் எம்​எல்ஏ மரக்​கன்​றுகளை நட்​டனர்.

பட்​டாளம் பகு​தி​யில் மாநக​ராட்சி பூங்​கா​வில் மாநக​ராட்சி இணை ஆணை​யர் (கல்​வி) க.கற்​பகம் பள்ளி மாணவ, மாணவி​களுக்கு சுற்​றுச்​சூழல் தொடர்​பாக விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில், அவர்​களு​டன் கலந்​துரை​யாடி மரக்​கன்​றுகளை நட்​டார்.

மேலும், மாநகரின் பல்​வேறு பகு​தி​களில் மக்​கள் பிர​தி​நி​தி​கள், மண்டல அலு​வலர்​கள், ஆசிரியர்​கள், மாணவ, மாண​வியர், தொண்டு நிறு​வனத்​தினர் உட்பட பலர் மரக்​கன்​றுகளை நட்​டனர். நேற்று ஒரே நாளில் சென்​னை​யில் 2900 மரக்​கன்​றுகள்​ நடவு செய்​யப்​பட்​டன.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் எம்எஸ்எம்இ திட்டங்கள்: பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in