கொரட்டூர், மாடம்பாக்கம் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

கொரட்டூர் ஏரி

கொரட்டூர் ஏரி

Updated on
2 min read

சென்னை: தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட மாடம்​பாக்​கம் ஏரி நீர், குடிநீ​ராகப் பயன்​படுத்​தப்​படும் நிலை​யில், உள்​ளாட்சி அமைப்​பு​களில் உரு​வாகும் கழி​வுநீர் அதில் கலப்​ப​தாக நாளிதழ் ஒன்​றில் கடந்த 2023 நவம்​பர் மாதம் செய்தி வெளி​யானது. அதன் அடிப்​படை​யில் தேசிய பசுமைத் தீர்ப்​பா​யத்​தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்​வந்து வழக்​காக பதிவு செய்து விசா​ரித்து வந்​தது.

இந்​நிலை​யில், அமர்​வின் நீதித் துறை உறுப்​பினர் நீதிபதி புஷ்பா சத்​ய​நா​ராயணா, தொழில்​நுட்ப உறுப்​பினர் பிர​சாந்த் கார்​கவா ஆகியோர் வழங்​கி​யுள்ள தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: ‘மாடம்​பாக்​கம் ஏரி​யில் பல்​வேறு பகு​தி​களில் எடுக்​கப்​பட்ட நீர் மாதிரி​களை சோதனை செய்​த​தில், மல கோலிஃ​பார்ம் என்ற பாக்​டீரியா அனு​ம​திக்​கப்​பட்ட அளவை​விட அதி​க​மாக உள்​ளது. இதன்​மூலம் நீரில் மனிதக் கழிவு கலந்​திருப்​பது உறுதி செய்​யப்​படு​கிறது. எனவே, இந்த நீர் குடிக்​க​வும், இதர பயன்​பாட்​டுக்​கும் உகந்​தது இல்​லை. ஏரி அமைந்​துள்ள மண்​டலத்​தில் நாள் ஒன்​றுக்கு 11.52 மில்​லியன் லிட்​டர் கழி​வுநீர் உற்​பத்​தி​யாகிறது.

ஆனால், இதை சுத்​தி​கரிக்​கும் அளவுக்கு உள்​ளாட்சி அமைப்​பிடம் கட்​டமைப்பு இல்​லாத​தால், சுத்​தி​கரிக்​கப்​ப​டாத கழி​வுநீர் ஏரி​யில் விடப்​படு​கிறது’ என்று மாசுக் கட்​டுப்​பாடு வாரி​யம் தாக்​கல் செய்த அறிக்​கை​யில், கூறப்​பட்​டுள்​ளது. எனவே, நிர்​ண​யிக்​கப்​பட்ட கால அளவுக்​குள் அப்​பகு​தி​யில் பாதாள சாக்​கடை திட்​டப் பணி​களை தாம்​பரம் மாநக​ராட்சி முடிக்க வேண்​டும்.

ஏரிக்கு மழை நீர் வடி​கால் வழி​யாக கழி​வுநீர் வரும் வழிகளை அடை​யாளம் கண்டு நிரந்​தர​மாக அடைக்க வேண்​டும். கழி​வுநீரை முறை​யாக சேகரித்து சுத்​தி​கரிக்க வேண்​டும். விதி​களை மீறி கழி​வுநீரை திறந்​து​விடும் குடி​யிருப்​பு​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். ஏரி​யில் உள்ள நீரின் தரத்தை மாசுக் கட்​டுப்​பாடு வாரி​யம் தொடர்ந்து கண்​காணிக்க வேண்​டும்.

ஏரியை சீரமைக்க விரி​வான திட்ட அறிக்கை தயாரிப்பு நிலை​யில் இருப்​ப​தாக நீர்​வளத் துறை கூறி​யுள்​ளது. அறிக்கை தயாரிப்​புக்​குப் பிறகு, ஏரி​யில் உள்ள களை​களை அகற்​றி, கரைகளை பலப்​படுத்​தி, ஆக்​கிரமிப்​பில் இருந்து ஏரியைப் பாது​காக்​கும் நடவடிக்​கைகளை இந்த துறை 6 மாதங்​களுக்​குள் முடிக்க வேண்​டும். சிஎம்​டிஏ நிர்​வாகம் இப்​பகு​தி​யில் மனை​களுக்கு அனு​மதி அளிக்​கும்​போது, சுற்​றுச்​சூழல் விதி​களை கட்​டா​யம் கடைபிடிக்க வேண்​டும். இவ்​வாறு தீர்ப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

‘சென்னை கொரட்​டூர் ஏரி​யில் கழி​வுநீர் கலப்​பதை தடுக்க வேண்​டும். சுற்​றுச்​சூழல் பாதிப்​பு, ஆக்​கிரமிப்​பில் இருந்து ஏரியை மீட்க வேண்​டும்’ என்று தேசிய பசுமைத் தீர்ப்​பா​யத்​தில் கொரட்​டூர் ஏரி பாது​காப்பு மக்​கள் இயக்​கம் கடந்த 2022-ம் ஆண்டு மனு தாக்​கல் செய்​தது.

மேற்​கண்ட அதே அமர்வு வழங்​கி​யுள்ள தீர்ப்பு விவரம்: ‘கொரட்​டூர் ஏரியை ஒட்​டி, அம்​பத்​தூரில் இயங்​கும் ஆவின் நிறு​வனத்​தில் ஆய்வு செய்​த​போது, அதன் தொழிற்​சாலை கழிவு சுத்​தி​கரிப்பு நிலை​யத்​தில் ஏராள​மான குறை​பாடு​கள் கண்​டறியப்​பட்​டன. இதைத் தொடர்ந்​து, கழி​வு​களை முறை​யாக சுத்​தி​கரிக்க உரிய அறி​வுறுத்​தல் வழங்​கப்​பட்​டுள்​ளது’ என்று மாசுக் கட்​டுப்​பாடு வாரி​யம் தாக்​கல் செய்த அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

எனவே, ஏரிக்கு செல்லும் கழி​வுநீர் வழிகள் அனைத்​தை​யும் சென்னை குடிநீர் வாரியம் உடனே கண்​டறியவேண்​டும். சட்ட​விரோத​மாக மழைநீர் வடி​கால் வழி​யாக கழி​வுநீர் இணைப்பு கொடுக்​கப் ​பட்​டுள்​ளதா என ஆய்வு செய்​து, அதை உடனே தடுத்து, சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களுக்கு மடை மாற்​று​வது போன்ற பணி​களை 6 மாதங்​களுக்​குள் மேற்​கொள்ள வேண்டும்.

ஏரியை அழகுபடுத்​தும் பணி: நீர்​வளத் துறை இந்த ஏரியை தூர்​வாரி, நீரின் தரத்தை மேம்​படுத்த வேண்​டும். சென்னை மாவட்ட ஆட்​சி​யர், பொதுப்​பணித்துறை, சென்னை மாநக​ராட்சி இணைந்து ஒருங்​கிணைந்த ஆய்வு நடத்​தி, ஆக்​கிரமிப்​பு​களைக் கண்​டறிந்து 6 மாதங்​களுக்​குள் அகற்ற வேண்​டும். ஏரியை அழகுபடுத்​தும் பணி​களை, ஆவின் மற்​றும் தனி​யார் நிறு​வனங்​கள் தங்​களது பெருநிறுவன சுற்​றுச்​சூழல் பொறுப்பு திட்​டத்​தின்​கீழ்​ மேற்கொள்​ள வேண்​டும்​. இவ்​வாறு தீர்ப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கொரட்டூர் ஏரி</p></div>
திமுக கூட்டணியில் இந்திய கம்யூ. இல்லை: மு.வீரபாண்டியன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in