கோவையில் ‘விதை விநாயகர்’ சிலைகள் விற்பனை தீவிரம்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விதை விநாயகர் சிலைகள். | படம்: ஜெ.மனோகரன் |

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விதை விநாயகர் சிலைகள். | படம்: ஜெ.மனோகரன் |

Updated on
1 min read

கோவை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பும், விற்பனையும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, சாலையோரங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் அருகே ‘விதை விநாயகர்’ சிலை தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிக்கப்பட்ட இச்சிலைக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சிலை விற்பனையாளர் அருணாதேவி கூறும்போது, ‘‘சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்ட விதை விநாயகர் சிலைகளின் உட்புறத்தில், கீரை விதைகள் வைக்கப்பட்டிருக்கும். உயர அளவை பொருத்து ரூ.100 முதல் ரூ.1,500 வரை விற்கப்படுகிறது.

வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளி்ல் வசிப்பவர்கள் வீட்டில் சிலை வைத்தால் அவற்றை எங்கு சென்று கரைப்பது என்ற சந்தேகம் எழும். அதை தவிர்க்க, விதை விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. இச்சிலைகளை வழிபாடு முடிந்தவுடன் வீடுகளில் உள்ள பூந்தொட்டிகளில் போட்டு தண்ணீர் ஊற்றினால் மண் கரைந்துவிடும்.

அதில் உள்ள விதைகள் செடியாக முளைக்கத் தொடங்கி விடும். இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு மட்டுமின்றி, செடிகள் வளர்த்த பலனும் கிடைக்கும்’’ என்றார்.

<div class="paragraphs"><p>கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விதை விநாயகர் சிலைகள். | படம்: ஜெ.மனோகரன் |</p></div>
காட்பாடி அருகே தேவாலயம் கட்டுமான பணியில் சாரம் சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in