

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுவை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கல்வி துறை அமைச்சர் ஆஷிஸ் சூட் நேற்று கூறியதாவது:
நீண்ட கால அடிப்படையில் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை செயல்பாடுகள் மூலம் காற்று மாசு பிரச்சினையை தீர்ப்பதில் அரசு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.
முந்தைய ஆம் ஆத்மி அரசைப்போல் ஒற்றைப்படை, இரட்டைப் படை வரிசையில் வாகனங்களை இயக்கும் திட்டத்தை நாங்கள் நம்புவது கிடையாது. எங்கள் பிள்ளைகள் தூய்மையான காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
அதற்காக, முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான் சாதனங்கள் பொருத்தப்படும். அதற்கான டெண்டர்கள் இன்றே (வெள்ளிக்கிழமை) கோரப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.