(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)

அசாம் | மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

Published on

கோக்ரஜார்: அசாம் மாநிலத்தில் மின்சாரம் தாக்கியதில் காட்டு யானை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அந்த மாநிலத்தின் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள சான்பன் வனச்சரகத்தில் நடந்துள்ளது. உணவு தேடி கூட்டமாக காட்டு யானைகள் மனிதர்கள் வாழ்ந்து வரும் பகுதிக்கு வந்துள்ளன. அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

யானையின் உயிரிழப்புக்கு காரணம் பரிந்துரைக்கப்பட்ட உயரத்தை காட்டிலும் தாழ்வாக சென்ற மின்சார வயர் தான் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது விபத்து எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காட்டுப்பகுதியில் இருந்து வெளிவந்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் நடந்தது வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்ததும் அங்கு விரைந்துள்ளனர். உயிரிழந்தது ஆண் யானை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்த வன அதிகாரிகள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக தகவல்.

அந்த மாநிலத்தின் காமரூப் மாவட்டத்தில் இதே போன்றதொரு சம்பவம் அண்மையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல கர்நாடக மாநிலத்தின் மலைநாடு பகுதியில் கடந்த 10 நாட்களில் மட்டும் 3 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன. இதற்கு காரணம் விவசாயிகள் அமைத்துள்ள மின்வேலிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கடந்த செப்டம்பர் வாக்கில் யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in