

"மைக்ரோ பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துவதற்கு முன்புஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்" என்று விஞ்ஞானிகள் அவ்வப்போது எச்சரிப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவதால் உருவாகும் மிகச் சிறிய துணுக்குகள், செயற்கை நார்கள், பிளாஸ்டிக் மணிகள், மருத்துவ நுண் பிளாஸ்டிக் உபகரணங்கள் போன்றவைதான் மைக்ரோ பிளாஸ்டிக்குகள். உதாரணத்துக்கு, நாம் பல் துலக்கும் பிரஷ்களில் துகள் கிடைக்கும் அல்லவா, அவையே மைக்ரோ பிளாஸ்டிக்குகள்.
இந்த மைக்ரோ பிளாஸ்டிக்கால் உருவாகும் மாசு, மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மைக்ரோ பிளாஸ்டிக்குகள் பெரும்பாலும் கடலில்தான் தற்போது பரவி காணப்படுகின்றன. அவை மீன்களில், ஷெல் மீன்களில் காணப்படுகின்றன. இவற்றைதான் மனிதர்கள் உண்ணுகின்றனர். இதன் காரணமாக மனிதர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகிறார்கள்.
இந்தச் சூழலில்தான் நோய் பரப்பும் கிருமிகள் நீரில் எவ்வாறு பரவுகின்றன என்பது குறித்து கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வின் முடிவு சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மைக்ரோ பிளாஸ்டிக், நோயைப் பரப்பும் கிருமிகள் ஓரே நீரில் கலக்கும்போது இந்தக் கிருமிகள் மைக்ரோ பிளாஸ்டிக்கை பயன்படுத்தி கடலிருந்து ஆழ் கடலுக்கு சென்று விடுகின்றன. இவ்வாறே கடற்கரையோரம் குவிந்திருக்கும் கிருமிகள் ஆழ்கடலுக்கு செல்கின்றன என்கிறது.
பிளாஸ்டிக் மற்றும் நோய்க்கிருமிகள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன? - கடல் நீர் மற்றும் கடல் உணவுகளில் பொதுவாக மாசை ஏற்படுத்தும் மூன்று ஒட்டுண்ணிகள் மீது நாங்கள் கவனம் செலுத்தினோம். ஒற்றை செல் புரோட்டோசோவான்களான டோக்ஸோபிளாஸ்மா கோண்டி (டாக்ஸோ), கிரிப்டோஸ்போரிடியம் (கிரிப்டோ) மற்றும் ஜியார்டியா. இந்த ஒட்டுண்ணிகள் பாதிக்கப்பட்ட விலங்குகளின் மலம், சுற்றுச்சூழல் மாசின்போது நீர்நிலைகளில் பரவுகின்றன.
இதில் கிரிப்டோ மற்றும் ஜியார்டியா இரைப்பை குடல் நோயை ஏற்படுத்துகிறது, இது இளம் குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு ஆபத்தானது. டோக்ஸோ மக்களில் வாழ்நாள் முழுவதும் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். மேலும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் ஆபத்தானது. டோக்ஸோ கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு அல்லது பார்வைக் குறைப்பாடு மற்றும் குழந்தைக்கு நரம்பியல் நோய்களை ஏற்படுத்தும்.
இதில் சில நோய்க்கிருமிகள் அழித்துவரும் கடல்வாழ் உயிரினங்களை கொன்றுவிடுகின்றன. இந்த ஒட்டுண்ணிகள் பிளாஸ்டிக் பரப்புகளில் ஒட்டிக்கொள்ளுமா என்பதைச் சோதிக்க, முதலில் மைக்ரோ பிளாஸ்டிக் மணிகள் மற்றும் இழைகளை இரண்டு வாரங்களுக்கு எங்கள் ஆய்வகத்தில் கடல் நீர் பீக்கர்களில் வைத்தோம். இதனைத் தொடர்ந்து ஓட்டுண்ணிகளை அதில் சேர்ந்தோம். இந்த சோதனை முடிவில் மைக்ரோ பிளாஸ்டிக்கில் ஓட்டுண்ணிகள் ஓட்டிக் கொள்வதை நாங்கள் கண்டறிந்தோம். நேரம் அதிகரிக்க அதிகரிக்க இந்த ஒட்டுண்ணிகள் மைக்ரோ பிளாஸ்டிக்கில் ஒட்டிக் கொள்ளும் எண்ணிக்கையும் அதிகரித்ததை நாங்கள் கண்டோம்.
இந்த ஆய்வில் மூலம் ஒட்டுண்ணிகள் கடலில் பரவ பிளாஸ்டிக்குகள் உதவுகின்றன என்பதை நாங்கள் உறுதி செய்தோம்.
பிளாஸ்டிக் மாசுபாடு கடலில் உள்ள விலங்குகளை மட்டுமே பாதிக்கிறது என்று தோன்றினாலும், அது இறுதியில் மனித ஆரோக்கியத்தில் தீங்கை ஏற்படுத்துகிறது.
உடல்நலப் பிரச்சனை
முதலில் பிளாஸ்டிக் மாசு கடலிலுள்ள நீர்வாழ் உயிரினங்களை மட்டுமே பாதிக்கிறது என்று தோன்றினாலும் இறுதியில் அது மனித ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. நமது பரந்துப்பட்ட கடல் சூழலைப் பாதிக்கும் சவாலான இந்தச் சிக்கலைத் தீர்க்க, மனித, விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதனையே இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
மேலும், மைக்ரோபிளாஸ்டிக்கை பயன்படுத்துவதற்கு முன்னர், ஒருமுறைக்கு இரண்டு முறை நாம் சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வை அமெரிக்காவின் கலிப்போர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசியர்கள் நடத்தியுள்ளனர்.