மழை, புயல் போன்ற எந்த இயற்கை காரணமும் இல்லாமல் குரோம்பேட்டையில் 60 ஆண்டு அரசமரம் சாய்ந்தது

பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது போராட்டம்
மழை, புயல் போன்ற எந்த இயற்கை காரணமும் இல்லாமல் குரோம்பேட்டையில் 60 ஆண்டு அரசமரம் சாய்ந்தது
Updated on: 
1 min read

குரோம்பேட்டை: குரோம்​பேட்டை பார​திபுரம் பகு​தி​யில் 60 ஆண்டு​கள் பழமை​யான அரசமரம் திடீரென சாய்ந்​ததற்​கான காரணத்தை கண்​டறிய வலி​யுறுத்​தி, பசுமைத் தாயகம், மக்களுக்கான மக்​கள் இயக்​கம் சார்​பில் பெண்​கள் ஒப்​பாரி வைத்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

குரோம்​பேட்டை பார​திபுரத்​தில் உள்ள  முத்​து​மாரி​யம்​மன் கோயில் அருகே சுமார் 60 ஆண்​டு​களாக பழமை​யான அரசமரம் இருந்து வந்​தது. அப்​பகுதி மக்​களுக்கு நிழல், பாது​காப்பு அளித்து வந்த இந்த மரம், நேற்று முன்​தினம் மழை, பலத்த காற்று போன்ற எந்த இயற்கை காரணங்​களும் இல்​லாத நிலை​யில் திடீரென சாய்ந்து விழுந்​தது. இதனால் அதிர்ச்​சி​யடைந்த அப்​பகுதி மக்​கள், மரம் சாய்ந்​ததற்​கான காரணம் குறித்து சந்​தேகம் எழுப்பியுள்ளனர். மரம் இடையூறாக இருப்​ப​தாகக் கரு​தி, அதன் வேர்​களில் ரசாயனப் பொருள் ஊற்​றப்​பட்​டிருக்​கலாம் என்ற சந்​தேக​மும் சில​ரால் தெரிவிக்​கப்​பட்​டது. எனினும் இதுகுறித்து அதிகாரப்​பூர்​வ​மாக எந்த காரண​மும் உறுதி செய்​யப்​பட​வில்​லை.

உண்மை கண்டறிய கோரிக்கை: மரம் சாய்ந்த சம்​பவம் தொடர்பாக உரிய விசா​ரணை நடத்​தி, மரத்​தின் வேர்​கள் மற்​றும் சுற்​றுப்​புறப் பகு​திகளை அறி​வியல் ரீதி​யாக ஆய்வு செய்து உண்மை​யான காரணத்​தைக் கண்​டறிய வேண்​டும் என பொது​மக்​கள், சமூக ஆர்​வலர்​கள் வலி​யுறுத்​தினர்.

இந்​நிலை​யில் பசுமைத் தாயகம் மற்​றும் மக்​களுக்​கான மக்​கள் இயக்​கம் சார்​பில் சாய்ந்த அரசமரத்​துக்கு அஞ்​சலி செலுத்​தும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் பங்​கேற்​றவர்​கள் மரத்​துக்கு பால் ஊற்​றி, மஞ்​சள், குங்​குமம் வைத்​து, மலர் தூவி அஞ்​சலி செலுத்தினர். தொடர்ந்து பெண்​கள் ஒப்​பாரி வைத்து அழுவதுபோல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

நிகழ்ச்​சி​யில் பசுமைத் தாயகம் மாநில துணைச் செய​லா​ளர் ஐ.நா.கண்​ணன், மக்​களுக்​கான மக்​கள் இயக்​கம் செய​லா​ளர் கார்த்​திக் கண்​ணன், மீனாட்சி சுந்​தரம், நரேந்​திரன், பசுமைத் தாயகம் நிர்​வாகி​கள் வளர்​மதி குப்​பன், வேதகிரி, சசிகு​மார், மணி​கண்​டன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். மேலும் சமூக ஆர்​வலர்​கள் மற்​றும் குடி​யிருப்​போர் நலச் சங்க நிர்​வாகி​களும் பங்​கேற்​றனர்.

பழமை​யான மரங்​களைப் பாது​காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றும், இந்த மரம் சாய்ந்​ததற்​கான காரணத்தை முழுமை​யாக வி​சா​ரித்து உண்​மையை வெளிக்​கொண்டு வர வேண்​டும்​ என்​றும்​ நிகழ்ச்​சி​யில்​ வலி​யுறுத்​தப்​பட்​டது.

மழை, புயல் போன்ற எந்த இயற்கை காரணமும் இல்லாமல் குரோம்பேட்டையில் 60 ஆண்டு அரசமரம் சாய்ந்தது
கோட்டை நிலையத்தில் மின்சார ரயில் திடீரென தடம் புரண்டது - 2 மணி நேரம் சேவை பாதிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in