சென்னையில் 406 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: மேலும் 200 டன் கழிவுகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை

மயிலாப்பூர் காரணீஸ்வரர் பகோடா தெருவில் பட்டாசு குப்பை அகற்றப்படும் பணியை மாநகராட்சி ஆணையர் சமீரன் நேற்று பார்வையிட்டார். உடன் மாநகராட்சி உயர் அதிகாரிகள். | படம்: எல்.சீனிவாசன் |

மயிலாப்பூர் காரணீஸ்வரர் பகோடா தெருவில் பட்டாசு குப்பை அகற்றப்படும் பணியை மாநகராட்சி ஆணையர் சமீரன் நேற்று பார்வையிட்டார். உடன் மாநகராட்சி உயர் அதிகாரிகள். | படம்: எல்.சீனிவாசன் |

Updated on: 
1 min read

சென்னை: ​மாநகரில் தீபாவளி​யின்​போது வெடிக்​கப்​பட்ட பட்​டாசுகளால் உரு​வான 406 டன் கழி​வு​களை மாநக​ராட்சி அகற்​றி​யுள்​ளது.

சென்​னை​யில் நேற்று முன்​தினம் தீபாவளி பண்​டிகை​யின்​போது நாள் முழு​வதும் வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​பட்​டது.

அவ்​வப்​போது சிறு சாரல் மழை​யும் பெய்து ரம்​மிய​மான சூழலை ஏற்​படுத்​தி​யிருந்த நிலை​யில், பொது​மக்​கள் இந்த ஆண்டு தீபாவளி பண்​டிகையை மிகுந்த உற்​சாகத்​துடன் கொண்​டாடினர்.

சிறு​வர்​கள் முதல் பெரிய​வர்​கள் வரை அனு​ம​திக்​கப்​பட்ட 2 மணி நேரத்​தை​யும் தாண்​டி, இரவு 12 மணி வரை ஓயாது வீதி​களி​லும், வீடு​களின் மொட்டை மாடிகளி​லும் பட்​டாசுகளை வெடித்து மகிழ்ந்​தனர்.

இதனால் உரு​வான நச்​சுக் குப்​பைக் கழி​வு​களை அகற்​றும் பணி​களை மாநக​ராட்சி மேற்​கொண்டு வரு​கிறது. தேனாம்​பேட்​டை​யில் நடை​பெற்ற பணி​களை மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் நேற்று பார்​வை​யிட்​டார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சென்னை மாநக​ராட்சி சார்​பில், தீபாவளி பண்​டிகை​யின்​ போது உரு​வாகும் பட்டாசு கழி​வு​களை பொது​மக்​கள் தனி​யாகப் பிரித்​து, அதற்​கென வழங்​கப்​பட்​டுள்ள தனிப்​பைகளில் சேகரித்​து, தூய்​மைப் பணி​யாளர்​களிடம் ஒப்​படைக்​கு​மாறு ஏற்​க​னவே கேட்​டுக்​கொள்​ளப்​பட்​டது.

இருப்​பினும், பொது​மக்​களிடையே இதற்​கான ஒத்​துழைப்பு எதிர்​பார்த்த அளவுக்கு இல்​லை. நேற்று பகல் 12 மணி வரை மாநக ரம் முழு​வதும் சுமார் 406 டன் பட்​டாசுக் கழி​வு​கள் அகற்​றப்​பட்​டுள்​ளன.

மேலும், வரும் நாட்​களில் மேலும் சுமார் 200 டன் அகற்ற மாநக​ராட்சி இலக்கு நிர்​ண​யித்து நடவடிக்கை எடுத்து வரு​கிறது.

இப்​பணிக்​காக, கூடு​தலாக 600 தூய்​மைப் பணி​யாளர்​கள் மற்​றும் 350 வாக​னங்​கள் மாநகரின் பல்​வேறு பகு​தி​களில் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளன.

மேலும், பட்​டாசுக் கழி​வு​களைத் தனி​யாக சேகரிப்​ப​தற்​காகத் தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு தலா 50 கிலோ கொள்​ளளவு கொண்ட 30 ஆயிரம் பைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

இவ்​வாறு சேகரிக்​கப்​படும் பட்​டாசுக் கழி​வு​கள், அறி​வியல் பூர்​வ​மாக, பாது​காப்​பான முறை​யில் சுத்​தி​கரித்து அகற்​று​வதற்​காக கும்​மிடிப்​பூண்​டி​யில் உள்ள பிரத்​யேக செய​லாக்க மையத்​துக்கு எடுத்​துச் செல்​லப்பட உள்​ளன. இவ்​வாறு மாநக​ராட்​சி ஆணை​யர்​ தெரிவித்​தார்​.

X