உலகின் மாசுபட்ட நகரங்கள்: முதலிடத்தில் டெல்லி

உலகின் மாசுபட்ட நகரங்கள்: முதலிடத்தில் டெல்லி
Updated on
1 min read

புதுடெல்லி: உலகின் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.

சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐகியூஏர்-ன் (IQAir) உலக காற்று தர அறிக்கை 2025 தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் நம் நாட்டின் தலைநகரமான டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்று தரக்குறியீடு (ஏகியூஐ) 350 ஆக உள்ளது.

இதன்மூலம் உலகில் மிகவும் மோசமாக மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை டெல்லி மாநகரம் பிடித்துள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு கடுமையான சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதனால், இந்தியர்களின் ஆயுள் காலம் 5.2 ஆண்டுகள் குறைகிறது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் இந்தப் பட்டியலில் மும்பை 5-வது இடத்தையும், கொல்கத்தா 8-வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் 2-வது இடத்தையும், கராச்சி 4-வது இடத்தையும் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in