பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட 100 பூங்கா இருக்கைகள்: மாநகராட்சிக்கு வழங்கிய உற்பத்தியாளர்கள் சங்கம்

தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பூங்கா இருக்கைகளை, ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவிடம் சங்க நிர்வாகிகள் நேற்று வழங்கினர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பூங்கா இருக்கைகளை, ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவிடம் சங்க நிர்வாகிகள் நேற்று வழங்கினர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட 100 பூங்கா இருக்கைகள், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவிடம் வழங்கப்பட்டது.

சென்னை மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளில், சுமார் 30 சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகளாக உள்ளன. இவற்றை சேகரித்து மாநகராட்சி நிர்வாகம் மறுசுழற்சிக்கு அனுப்புகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட 100 பூங்கா இருக்கைகளை, சென்னை மாநகராட்சிப் பூங்காக்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சங்க நிர்வாகிகள் பாபு ஸ்ரீனிவாசன், பி.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்று, மேயர் ஆர்.பிரியாவிடம் பிளாஸ்டிக் இருக்கைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கூடுதல் ஆணையர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, நிலைக் குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) கோ. சாந்தகுமாரி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in