பிளாஸ்டிக் குடுவையில் பனங்கிழங்கு விவசாயம்: சுற்றுச்சூழல் ஆர்வலரின் வித்தியாச முயற்சி

பிளாஸ்டிக் குடுவையில் பனங்கிழங்கு விவசாயம்: சுற்றுச்சூழல் ஆர்வலரின் வித்தியாச முயற்சி
Updated on
1 min read

மதுரை: சாலைகளில் தூக்கி வீசப்பட்ட 2 லிட்டர் நெகிழிக் குடுவைகளைச் சேகரித்து அதில் பனைவிதைகளை விதைத்து 120 நாட்கள் கழித்து பனங்கிழங்கு எடுக்கும் ஓர் வித்தியாசமான முயற்சியை மதுரையைச் சேர்ந்த பசுமை செயற்பாட்டாளர் ஒருவர் மேற்கொண்டுள்ளார்.

சாலையில் வீசப்படும் நெகிழி குடுவைகள் மீது வாகனங்கள் ஏறி நைந்து பூமியில் சென்று மக்காது மண்ணுக்குத் தீங்கு விளைவிக்கிறது. அதைத் தவிர்க்கும் வகையில், மதுரையைச் சேர்ந்த பசுமை செயற்பாட்டாளர் ஜி.அசோக்குமார், நெகிழி குடுவைகள் மறு சுழற்சிக்கு முறையாகச் செல்லும் முன் பசுமைக்குப் பயன்படுத்திடும் ஓர் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

சாலைகளில் தூக்கி வீசப்பட்ட 2 லிட்டர் நெகிழிக் குடுவைகளைச் சேகரித்து அதில் பனைவிதைகளை விதைத்து 120 நாட்கள் கழித்து பனங்கிழங்கு எடுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் அவர். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பசுமை முயற்சியைப் பள்ளி மாணவ- மாணவியரிடம் ஆரம்பித்தால் மட்டுமே அது வெற்றிபெறும். அதற்காக, நான் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று இளம் விவசாயிகள் குழு ஏற்படுத்தி அவர்களுக்கு வேளாண்மையின் அவசியத்தையும், அதில் பனை விதைகளின் முக்கியத்துவத்தையும் பற்றி எடுத்துக் கூறி வருகிறேன்.

அந்த வகையில்தான் இந்த நெகிழி குடுவைகளைச் சேகரித்து, அதில் மாணவர்கள் மூலம் பனை மரவிதையினை குடுவையில் விதைத்தோம். இதனை உழவர் திருநாள், தை திருநாள் முன்னிட்டு மாணவச் செல்வங்களின் கரங்களினால் அறுவடை செய்வோம். நேற்றிலிருந்து தொடர்ச்சியாக நெகிழிக் குடுவைகளைச் சேகரித்து அவற்றில் பனைவிதைகளை விதைக்கும் பணிகளைத் தொடங்கி இருக்கிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in