

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி,சானமாவு ஆகிய வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது. இங்குள்ள யானைகள் அவ்வப்போது தனித்தனியாக பிரிந்து அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
அதேபோல் யானைகள் வனச்சாலைகளில் நின்றுக்கொண்டு சாலையைவிட்டு நகராமல் இருப்பாதால், அந்தs சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் யானை சாலையை கடந்து செல்லும் வரை காத்திருக்கின்றனர்.
மேலும், யானைகள் கிராமப் பகுதியில் சுற்றித் திரியும்போது, கிராமத்தை சேர்ந்த சிலர் ஆர்வத்தில் விபரீதத்தை உணராமல் துரத்தில் சென்று செல்போனில் வீடியோ எடுப்பதும், செல்ஃபி எடுக்கின்றனர். இதுபோன்ற சம்பவம் இடையூரை ஏற்படுத்துவால் யானைகள், மனிதர்களை தாக்கும் சம்பவம் நடக்கிறது.
இந்நிலையில், குந்துக்கோட்டையிலிருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் ஒற்றை யானை ஒன்று, சாலையில் நடந்து சென்று பின்னர் சாலையோரமாக நின்றது. இதனால் சாலையின் இருபுறம் பொதுமக்கள் கடந்து செல்லாமல் காத்திருந்தினர்.
அப்போது அங்கிருந்த சிலர் ஒற்றை யானையை வீடியோ எடுத்தனர். சிலர் அருகே செல்போனில் செல்பி எடுத்தனர். இதனால் கோபப்பட்ட யானை, சாலையில் நின்றிருந்த பொதுமக்களை பார்த்து பிளிரிக்கொண்டு திரும்பியது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் பட்டாசு வெடித்து காட்டுக்குள் யானையை விரட்டினர். இதுபோன்று விபரீத்தை உணராமல் யானைக்கு இடையூர் செய்வதை வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்