Published : 05 Mar 2024 04:02 AM
Last Updated : 05 Mar 2024 04:02 AM

சிவகங்கை நிலப்பரப்பில் 141 வகையான பறவைகள் - வனத்துறை கணக்கெடுப்பில் தகவல்

சிவப்பு மீசைச்சின்னான், செம்பிட்டத் தகைவிலான், கருப்பு வெள்ளைக்குருவி, கருஞ்சிட்டு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நிலப்பரப்பில் 141 வகையான பறவைகள் இருப்பது வனத் துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 25 நிலப்பரப்புகளில் பறவை கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் பிரபா தலைமை வித்தார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பறவையியல் வல்லுநர்கள், புகைப்பட வல்லுநர்கள் பங்கேற்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் சுடலைக் குயில், ஆசியக் குயில், செங்குயில், அக்காக்குயில், பூரி புள்ளி ஆந்தை, கொண்ட லாத்தி, மீன்கொத்தி, வெண் கொண்டை மீன்கொத்தி, செம் பிட்டத் தகைவிலான், கொண்டைக் குருவி, சிவப்பு மீசைச் சின்னான் உள்ளிட்ட 141 வகையான பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

பழுப்பு ஈப்பிடிப்பான், செந்தலைப் பூங்குருவி, வரிவாலாட்டிங் குருவி

மொத்தம் 12,000 மேற்பட்ட பறவைகள் உள்ளன. இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டோருக்கு மார்ச் 2-ம் தேதி பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் பறவைகள் அதிகரித்திருப்பது நிலப்பரப்பில் போதுமான தண்ணீர், தேவையான உணவு, இனப் பெருக்கம் செய்ய ஏற்ற சூழ்நிலை இருப்பதை காட்டுவதாக மாவட்ட வன அலுவலர் பிரபா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x