Last Updated : 26 Feb, 2024 11:54 AM

 

Published : 26 Feb 2024 11:54 AM
Last Updated : 26 Feb 2024 11:54 AM

ஓசூர் - ராமநாயக்கன் ஏரியில் கழிவு நீர் திறப்பதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கழிவு நீர் வெளியேற்றம்

ஓசூர்: ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் ராட்ஷத குழாய் மூலம் கழிவு நீர் திறந்து விடுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் குடியிருப்புகளின் மத்தியில் அமைந்துள்ள ராமநாயக்கன் ஏரி சுமார் 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு மேலே பூனப்பள்ளி ஏரி, ஜீகூர் ஏரி, தாசரப்பள்ளி ஏரி, கல்லேரி, கர்னூல் ஏரி, அந்திவாடி ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பும் போது, உபரிநீர் ஒவ்வொரு ஏரிக்கும் சென்று ராமநாயக்கன் ஏரியை வந்தடையும் வகையில் உபரிநீர்க் கால்வாய்கள் இருந்தது. 1980 ஆம் ஆண்டு வரை இந்த ஏரியை நம்பி பல ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. அதே போல் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்ததால், கோடைக்காலங்களிலும் குடிநீருக்கு பஞ்சமின்றி இருந்தது.

இந்நிலையில் நாளடைவில் குடியிருப்புகளும், வணிக வளாக கட்டிடங்கள் அதிகரித்ததாலும், கால்வாய்கள் ஆக்கிரமிப்பு மற்றும் ஏரியை சுற்றிலும் வணிகவளாகங்கள், தனியார் மருத்துவமனை, திருமண மண்டபங்கள், உணவகங்கள் என கட்டிடங்கள் கட்டப்பட்டதால், ஏரியின் பரப்பளவு குறைந்தது. இந்நிலையில் ஏரியை சுற்றி உள்ள மருத்துவமனை மற்றும் திருமண மண்டபங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் ராட்ஷத குழாய் மண்ணில் புகைத்து ஏரியில் நேரடியாக திறந்து விடப்பட்டுள்ளது.

இதே போன்ற ஏரியை சுற்றிலும் குழாய் பதித்து, கழிவு நீர் திறந்து விடப்படுவதால், கழிவு நீர் ஏரி முழுவதும் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஏரி மாசுடைந்துள்ளதாகவும், ஏரியில் உள்ள நீர் வாழ் உயிரினங்களுக்கு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, “ஒரு காலத்தில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக இருந்த ராமநாயக்கன் ஏரி தற்போது, ஏரி சுற்றிலும் ஆக்கிரமிப்பால் பரப்பளவு குறைந்துள்ளது. அதே போல் ஏரியை சுற்றிலும் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை ராட்ஷத குழாய் அமைத்து ஏரியில் திறந்து விடுகின்றனர். ஏரியில் தண்ணீர் இருந்த போது, கழிவு நீர் திறந்து விடுவது தெரியாமல் இருந்தது, தற்போது ஏரியில் தண்ணீர் வற்றியதால், கழிவு நீர் திறந்து விடுவது அம்பலமாகி உள்ளது.

ஏரியில் திறந்து விடப்படும் கழிவு நீர் ஏரியில் ஆங்காங்கே தேங்கி நின்று கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஏரி முழுவதும் கழிவு நீர் தேங்கி நிற்கும் குட்டையாக மாறி உள்ளது. அதே போல் ஏரியை சுற்றிலும் கோழிக்கழிவுகள்,அழுகிய முட்டைகள், குப்பை கழிவுகளை கொட்டப்பட்டு வருகிறது. ஏரியை பாதுகாக்க வேண்டும் என்றால், ஏரியில் கழிவு நீர் திறந்து விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும்” என கூறினர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x