

ஓசூர்: ஓசூர் அடுத்த போடூர் பள்ளத்திலிருந்த 4 யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு வனத் துறையினர் இடம்பெயரச் செய்தனர்.
கர்நாடக மாநில வனப்பகுதியில் ருந்து தமிழகத்துக்கு யானைகள் இடம்பெயர்ந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனக்கோட்டத்திற்கு 150-க்கும் மேற்பட்ட யானைகள் உணவு தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து, பல்வேறு குழுக்கலாக தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, சனமாவு வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்துள்ளது. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனத்தைவிட்டு வெளியேறி அருகே உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
அதேபோல் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து 4 யானைகள் சானமாவு வழியாக ஓசூர் அடுத்துள்ள போடூர்பள்ளம் வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து, அருகே உள்ள விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இந்த யானைகளால் மனித உயிர்களுக்கும், விளை நிலங்களுக்கும் உரிய பாதுகாப்பு இல்லம் உள்ளது. இந்த யானைகளை போடூர்பள்ளத்திலிருந்து விரட்ட வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில்,காலை ஓசூர் வனசரகர் பார்த்தசாரதி தலைமையில் வனத்துறையினர் போடூர் பள்ளத்தில் இருந்த 4 யானைகளை பட்டாசு வெடித்தும், சத்தங்கள் எழுப்பி ராயக்கோட்டை சாலை வழியாக சானமாவு வனப்பகுதிக்குள் இடம்பெயர செய்தனர்.
மேலும், இரவு நேரங்களில் மீண்டும் இப்பகுதியில் உள்ள யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் யானைகள் செல்லும் வழிப்பாதைகளையொட்டி உள்ள கிராம மக்கள் யாரும் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்