

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| இளவழகன் (பாமக) | அதிமுக |
| ஜே.எல்.ஈஸ்வரப்பன் | திமுக |
| என்.ஜனார்த்தனன் | அமமுக |
| முகமது ரபி | மக்கள் நீதி மய்யம் |
| இரா.கதிரவன் | நாம் தமிழர் கட்சி |
17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஆற்காட்டை தலைமையிடமாகக் கொண்டு நவாபுகள் ஆட்சி செய்த பெருமைக்குரிய தொகுதியாக இருக்கிறது. விவசாயத்தை பின்னணியாக கொண்ட பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லாமல் உள்ள தொகுதி.
ஆற்காடு கிச்சிலி சம்பா அரிசி உற்பத்திக்கு பெயர் பெற்ற இந்தத் தொகுதி சற்றேறக் குறைய 150 ஆண்டுகள் ஆற்காடு நவாப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆம்பூர் பிரியாணிக்கு அடுத்தபடியாக ஆற்காடு பிரியாணியும், மக்கன் பேடாவும் பொதுமக்கள் மத்தியில் புகழ் பெற்றவை. ஆரணி, களம்பூர் அரிசி ஆலைகளுக்கு போட்டியாக பெயர் குறிப்பிடும் அளவுக்கு நவீன அரிசி ஆலைகள் இந்த தொகுதியில் இயங்கி வருகின்றது. தொகுதியின் அடையாளங்களாக ஆற்காடு நவாப் சதாத்துல்லாகானின் பச்சை நிற கல்லறை கட்டிடம், ஆற்காட்டை கைப்பற்றிய ராபர்ட்கிளைவ் கட்டிய ‘டெல்லிகேட் ’உள்ளிட்ட தொகுதியின் அடையாளங்களாக உள்ளது.
விவசாயம், நெசவுத்தொழில் பிரதானம். தமிழ்நாட்டில் காய்கனி கழிவில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் முதல் நகராட்சி என்ற பெருமையுடன் சிறந்த நகராட்சியாக ஆற்காடு தேர்வு செய்யப்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு அரசின் விருதினை பெற்றுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
காட்பாடி வட்டம் (பகுதி):
தெங்கால், பாலேகுப்பம், கொண்டாரெட்டிபள்ளி, பொன்னை, பரமசாத்து, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொல்லபள்ளி, அம்மவாரிபள்ளி, மகிமண்டலம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, முத்தரசிகுப்பம், விண்ணம்பள்ளி, கொடுக்கந்தாங்கல், இளையநல்லூர், தேம்பள்ளி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், குகையநல்லூர், ஏராந்தாங்கல், சேர்க்காடு, ஒட்டந்தாங்கல், கரிகிரி, கண்டிபேடு, புதூர், செம்பராயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், அரும்பருத்தி, கார்ணம்பட்டு, அம்முண்டி, வண்டநந்தாங்கல், கரசமங்கலம், உண்ணாமலைசமுத்திரம், தலையாரம்பட்டு, தண்டலம்கிருஷ்ணாபுரம், விருதம்பட்டு, மற்றும் தாராபடவேடு கிராமங்கள்.
தாராபடவேடு, (பேரூராட்சி), கழிஞ்சூர் (பேரூராட்சி), காட்பாடி (பேரூராட்சி), காங்கேயநல்லூர் (சென்சஸ் டவுன்), காந்திநகர் (காட்பாடி விரிவாக்கம்) (பேரூராட்சி) திருவலம் (பேரூராட்சி) மற்றும் சேனூர் (சென்சஸ் டவுன்),
வேலூர் வட்டம் (பகுதி)
செம்பாக்கம் (பேரூராட்சி)
வாலாஜா வட்டம் (பகுதி)
வசூர், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம் மற்றும் லாலாப்பேட்டை கிராமங்கள்.
தொகுதி மக்கள் பிரச்சினைகள்
ஆற்காடு தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருப்பது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.எஸ்.எஸ் கல்லூரிக்கு எதிரில் விபத்துகளை குறைக்க மேம்பாலம் கட்ட வேண்டும், காவனூரில் ஆரம்ப சுகாதார நிலையம், ஆற்காடு அரசு மருத்துவமனையை கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும், செய்யாறு, ஆரணி, கண்ணமங்கலம் பகுதிக்கு அரசு பேருந்து சேவை மற்றும் கிராமப்பகுதியில் இருந்து பள்ளி நேரத்துக்கு அரசு பேருந்து வசதி, கால்நடை மருத்துவமனைகள் தேவையாகஇருக்கிறது. பல ஆண்டுகளாக வாய்மொழி உத்தரவாகவே இருக்கும் ஆற்காடு புறவழிச்சாலை திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
தேர்தல் வரலாறு
கடந்த 1951முதல் சட்டப்பேரவை தேர்தலை ஆற்காடு தொகுதி சந்தித்து வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 15 சட்டப்பேரவை பொது தேர்தலில் காங்கிரஸ் 2, திமுக 6, அதிமுக 6, பாமக ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.
2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 9 பேர் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், 84,182 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கோடாளி கே.வி.ராமதாஸ், 73,091 வாக்குகள் பெற்றார்.
2021 ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,26,652 |
| பெண் | 1,33,475 |
| மூன்றாம் பாலினத்தவர் | 8 |
| மொத்த வாக்காளர்கள் | 2,60,135 |
2020 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | கே.வி.ராமதாஸ் | அதிமுக |
| 2 | ஜெ.எல்.ஈஸ்வரப்பன் | திமுக |
| 3 | பி.என்.உதயகுமார் | மதிமுக |
| 4 | ஜி.கரிகாலன் | பாமக |
| 5 | டி.அருள்தாசன் | பாஜக |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
| 1962 | பி.ராஜகோபால்நாயுடு | காங்கிரஸ் |
| 1967 | ஜி.நடராஜன் | திமுக |
| 2006 சட்டமன்ற தேர்தல் | 42. ஆற்காடு | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | K.L. இலவழகன் | பா.மா.க | 60286 |
| 2 | V.R. சந்திரன் | அ.தி.மு.க | 48969 |
| 3 | V.B. வேலு | தி.மு.க | 8523 |
| 4 | S. சேதுமாதவன் | எஸ்.பி. | 2006 |
| 5 | P. குப்புசாமி | சுயேச்சை | 1610 |
| 6 | S. தியாகராஜன் | பிஜேபி | 1319 |
| 7 | V.குபேந்திரன் | சுயேச்சை | 657 |
| 8 | C. முனிசாமி | எல்.ஜெ.பி | 337 |
| 123707 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
| 2011 சட்டமன்ற தேர்தல் | 42. ஆற்காடு | ||
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | ஆர். சீனிவாசன் | அ.தி.மு.க | 93258 |
| 2 | இளவழகன் | பா.ம.க | 74005 |
| 3 | M. வேலு | சுயேச்சை | 3211 |
| 4 | தணிகாசலம் | பி.ஜே.பி | 2046 |
| 5 | விஜயன். S.R | சுயேச்சை | 960 |
| 6 | C. ஸ்ரீனிவாசன் | சுயேச்சை | 710 |
| 7 | K. பாலமுருகன் | பி.எஸ்.பி | 497 |
| 8 | திருநாவுக்கரசு .S | சுயேச்சை | 337 |
| 9 | K. ஆனந்தன் | எல்.ஜே.பி | 302 |
| 10 | V.G. சம்பத் | சுயேச்சை | 284 |
| 175610 |