கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி
Updated on
1 min read

தமிழகத்தில் ஒரு காலத்தில் காங்கிரஸ் வலிமையாக இருந்த தொகுதிகளில் கிருஷ்ணகிரியும் ஒன்று. கர்நாடக, ஆந்திர எல்லையையொட்டிய தொகுதி என்பதால், தமிழ் மொழி பேசும் மக்கள் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களும் கணிசமாக வசிக்கும் தொகுதி.

தேர்தலில் இவர்களது முடிவும் எதிரொலிக்கும் என்பதால், அரசியல் கட்சிகள் அதற்கு ஏற்ற வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்வது வழக்கம். மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி பல முறைபோட்டியிட்டு வென்ற தொகுதி இது. இதனால் காங்கிரஸுக்கு மட்டுமல்லாமல் வாழப்பாடி ராமமூர்த்திக்கென தனிப்பட்ட செல்வாக்கு இருந்த தொகுதியாக இருந்து வந்தது.

பலமுறை காங்கிரஸ் வென்ற இந்த தொகுதியில் சமீபகாலமாக திமுகவும், அதிமுகவும் பலம் காட்டி வருகின்றன.

கிருஷ்ணிகிரி, ஒசூர் தொகுதிகளில் அதிகமான தொழிற்சாலைகள் இருப்பதால் தொழிலாளர்களும் கணிசமாக வசிக்கின்றனர். இதுமட்டுமின்றி காய்கறிகள், பூக்கள் என தோட்டப்பயிர்கள் அதிகஅளவில் பயிர் செய்யப்படும் பகுதியாகவும் கிருஷ்ணகிரி தொகுதி விளங்கி வருகிறது.

ரோஜா பூக்கள் இங்கிருந்து அதிகஅளவில் ஏற்றுமதி ஆகிறது. பெங்களூருக்கு மிக அருகில் இருப்பதால் ஐடி உள்ளிட்ட நிறுவனங்களும் ஒசூரை மையப்படுத்தி தற்போது தளிர்த்து வருகின்றன.

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

கிருஷ்ணகிரி

ஒசூர்

பர்கூர்

தளி

ஊத்தங்கரை (எஸ்சி)

வேப்பனஹள்ளி

தற்போதைய எம்.பி

அசோக்குமார், அதிமுக

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சிவேட்பாளர்வாக்குகள்
அதிமுகஅசோக்குமார்480491
திமுகசின்ன பிள்ளப்பா273900
பாமகஜி.கே.மணி224963
காங்செல்லகுமார்38885

முந்தைய தேர்தல்கள்

ஆண்டுவென்றவர்2ம் இடம்
1971தீர்த்தகிரி கவுண்டர், காங்திருப்பதி, சுதந்திரா கட்சி
1971 இடைத்தேர்தல்சுப்பிரமணியம், காங்தேசிகன், காங்
1977பெரியசாமி, அதிமுககமலநாதன், திமுக
1980வாழப்பாடி ராமமூர்த்தி,காங் ராஜகோபால், அதிமுக
1984வாழப்பாடி ராமமூர்த்தி,காங் சந்திரசேகரன், திமுக
1991வாழப்பாடி ராமமூர்த்தி,காங் மாணிக்கம், ஜனதாதளம்
1996நரசிம்மன், தமாகாஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்
1998முனுசாமி, அதிமுகராஜராம் பாபு, தமாகா
1999வெற்றிச்செல்வன்,திமுக தம்பிதுரை, அதிமுக
2004சுகவனம், திமுகநஞ்சே கவுடு, அதிமுக
2009சுகவனம், திமுகநஞ்சே கவுடு, அதிமுக

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

கிருஷ்ணகிரி : செங்குட்டுவன், திமுக

ஒசூர் : பாலகிருஷ்ண ரெட்டி, அதிமுக

பர்கூர் : ராஜேந்திரன், அதிமுக

தளி : பிரகாஷ், திமுக

ஊத்தங்கரை (எஸ்சி) : மனோ ரஞ்சிதம், அதிமுக

வேப்பனஹள்ளி : முருகன், திமுக

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

கே.பி.முனுசாமி (அதிமுக)

ஏ. செல்லக்குமார் (காங்கிரஸ்)

கணேச குமார் (அமமுக)

ஸ்ரீ காருண்யா (மநீம)

மதுசூதனன் (நாம் தமிழர்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in