தின்குவேட், வேலிஎன்எக்ஸ்டி நிறுவனங்களுடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

மாணவர்களின் தொழில் முயற்சிக்கு ரூ.10 கோடி முதலீடு
வேலூர் விஐடியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழில் முயற்சிக்கு தின்குவேட் முதலீட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்ட விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன். உடன் விஐடி துணைவேந்​தர் வி.எஸ்​.​காஞ்​சனா பாஸ்​கரன், இணை துணைவேந்​தர் பார்த்​த​சா​ரதி மல்​லிக் உள்ளிட்டோர்.

வேலூர் விஐடியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழில் முயற்சிக்கு தின்குவேட் முதலீட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்ட விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன். உடன் விஐடி துணைவேந்​தர் வி.எஸ்​.​காஞ்​சனா பாஸ்​கரன், இணை துணைவேந்​தர் பார்த்​த​சா​ரதி மல்​லிக் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

வேலூர்: சிங்​கப்​பூரைச் சேர்ந்த தின்​கு​ வேட் மற்​றும் இந்​தூரைச் சேர்ந்த வேலிஎன்​எக்​ஸ்டி கல்வி நிறு​வனங்​கள் மாணவர் தொழில் முயற்​சிகளை ஊக்​குவிக்​கும் வகை​யில் விஐடி பல்​கலைக்​கழகத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டுள்​ளது.

இதன்​மூலம், தின்​கு​வேட் மற்​றும் வேலிஎன்​எக்​ஸ்டி நிறு​வனங்​கள் தலா ரூ.5 கோடி என மொத்​தம் ரூ.10 கோடி வரை முதலீடு செய்​ய​வுள்​ளன. சிங்​கப்​பூர் மற்​றும் இந்​தி​யா​வில் செயல்​படும் முதலீட்டு நிறு​வன​மான தின்​கு​வேட், முதல்​கட்ட முதலீடு​களில் நிபுணத்​து​வம் பெற்​றது. டீப்​டெக், ஃபின்​டெக், ஹெல்த்​டெக் தொழில் துறை​களில் கவனம் செலுத்​தும். இந்த ஒத்​துழைப்​பு, இந்​தியா மற்​றும் தென்​கிழக்கு ஆசிய நாடு​களில் வாய்ப்​பு​களை விரிவுபடுத்​தும்.

ஸ்டார்ட்​-அப்​களுக்கு முதலீடு: ஐஐடி உள்​ளிட்ட முன்​னணி கல்வி நிறு​வனங்​களின் மாணவர் தலை​மையி​லான தொழில்​நுட்ப ஸ்டார்ட்​-அப்​களுக்கு முதலீடு செய்​து, சந்தை விரி​வாக்​கம் உள்​ளிட்​ட​வை​களுக்கு தின்​கு​வேட் நிறு​வனம் உதவி வரு​கிறது.

அதேபோல, வேலிஎன்​எக்ஸ்டி முதலீட்டு நிறு​வனம் நிஜ உலகம் சந்​திக்​கும் பிரச்​சினை​களுக்கு தீர்வு காணுதல், சுகா​தா​ரம், கல்​வி, காலநிலை மாற்​றம், வேலை​வாய்ப்பு மற்​றும் வாழ்​வா​தா​ரத்​துக்கு ஆதரவு அளிக்​கும். புதிய கண்​டு​பிடிப்​பு​கள், அனுபவம் வாய்ந்த நிபுணர்​களின் வழி​காட்​டு​தல், ஒத்​துழைப்பு ஆகிய​வை​களில் இணைந்து செயல்​படும்.

இந்த புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்தை தின்​கு​வேட் முதலீட்டு நிறு​வனத்​தின் மேலாண்மை பங்​கு​தா​ரர் அடிசன் அப்பு மற்​றும் வேலிஎன்​எக்​ஸ்டி முதலீட்டு நிறு​வனத்​தின் துணைத் தலை​வர் ஹர்​ஷவர்​தன் சக்​லேசா மற்​றும் விஐடி துணைத் தலை​வர் சேகர் விசுவ​நாதன் ஆகியோர் பரி​மாறிக்​கொண்​டனர். இதில், விஐடி துணைவேந்​தர் வி.எஸ்​.​காஞ்​சனா பாஸ்​கரன், இணை துணைவேந்​தர் பார்த்​த​சா​ரதி மல்​லிக், புதிய கண்​டு​பிடிப்​பு​கள் இயக்​குநர் சிதம்​பரம் ரமேஷ்கு​மார், முன்​னாள் மாணவர் துறை இயக்​குநர் கார்த்​தி​கேயன், நோர்​டிக் புதிய கண்​டு​பிடிப்​பாளர்​களுக்​கான வர்த்தக மேம்​பாடு மற்​றும் புதுமை மூத்த ஆலோ​சகரும், விஐடி முன்​னாள் மாணவரு​மான ரஜத் பாண்டே உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

<div class="paragraphs"><p>வேலூர் விஐடியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழில் முயற்சிக்கு தின்குவேட் முதலீட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்ட விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன். உடன் விஐடி துணைவேந்​தர் வி.எஸ்​.​காஞ்​சனா பாஸ்​கரன், இணை துணைவேந்​தர் பார்த்​த​சா​ரதி மல்​லிக் உள்ளிட்டோர்.</p></div>
‘போராட்டத்தை முடித்துக் கொள்வதாக சொல்லி ராகுல் வார்த்தை தவறிவிட்டார்’ - மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in