கியூ.எஸ். உலக தரவரிசையில் 597-ம் இடம் பிடித்த விஐடி

கியூ.எஸ். உலக தரவரிசையில் 597-ம் இடம் பிடித்த விஐடி
Updated on
1 min read

வேலூர்: ​​விஐடி பல்​கலைக்​கழகம் கியூ.எஸ். உலக பல்​கலைக்​கழகதரவரிசை பட்​டியலில் 94 இடங்​கள் முன்​னேறி 597-ம் இடத்தை பிடித்​துள்​ளது.

உலகளா​விய உயர்​கல்வி பகுப்​பாய்வு நிறு​வன​மான ‘கியூ.எஸ். குவாக்​கரெல்லி சைமண்ட்​ஸ்’ 2027-ம் ஆண்​டுக்​கான உலக பல்​கலைக்​கழக தரவரிசைப் பட்​டியலை வெளி​யிட்​டது. 1500-க்​கும் மேற்​பட்ட பல்​கலைக்​கழகங்​களில் ஆராய்ச்சி மற்​றும் கண்​டு​பிடிப்​பு, கற்​றல் அனுபவம், வேலை​வாய்ப்​பு, சர்​வ​தேச தொடர்​பு​கள், நிலைத்​தன்மை ஆகிய 5 அம்​சங்​களை ஆய்வு செய்து முடிவு​களை வெளி​யிட்​டது. நிகழாண்​டில் விஐடி பல்​கலைக்​கழகம் கியூ.எஸ். தரவரிசையில் 94 இடங்​கள் முன்​னேறி 597-ம் இடத்தை பிடித்​துள்​ளது. 2026-ம் ஆண்​டில் கியூ.எஸ். தரவரிசை​யில் 691-ம் இடத்தை விஐடி பிடித்​திருந்​தது.

இதுகுறித்து விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் கூறும்​போது, “உல​கம் முழு​வதும் உள்ள கல்வி நிறுவனங்களு​டன் நில​வும் கடுமை​யான போட்டி சூழலில் விஐடி பல்​கலைக்​கழகம் கியூ.எஸ். உலக பல்​கலைக்​கழக தரவரிசை​யில் குறிப்​பிடத்​தக்க முன்​னேற்​றம் அடைந்​திருப்​பது பெரு​மைக்​குரிய விஷய​மாகும். கியூ.எஸ். உலக பல்​கலைக்​ கழக தரவரிசை​யில் நிலைத்​தன்மை பிரி​வில் 2026-ம் ஆண்​டில் 352-ம் இடம் பிடித்​ததுடன், இந்​தி​யள​வில் 7-ம் இடம் பிடித்​தது.

அதேபோல கியூ.எஸ். உலக பல்​கலைக்​கழக பாடப் ​பிரிவு தரவரிசையில் 2026-ல் பொறியியல் மற்​றும் தொழில்​நுட்​பத்​தில் விஐடி 119-ம் இடத்​தை​யும் இந்​திய அளவில் 6-வது இடத்​தை​யும் பிடித்​தது. கற்​பித்​தலில் புது​மை, ஆராய்ச்சி மேம்​பாட்​டில் திருப்புமுனை​களை ஏற்​படுத்​தி,உலகள​வில்​ முதல்​ 200 தரவரிசை பெறுவதை நோக்​க​மாக கொண்​டுள்​ளது” என்​றார்​.

கியூ.எஸ். உலக தரவரிசையில் 597-ம் இடம் பிடித்த விஐடி
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 23-ம் தேதி வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in