இளநிலை க்யூட் தேர்வு தேதி மாற்றம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

இளநிலை க்யூட் தேர்வு தேதி மாற்றம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பக்ரீத் பண்டிகை காரணமாக நேற்று முதல் நடைபெறுவதாக இருந்த இளநிலை க்யூட் தேர்வு 2026-ஐ தேசிய தேர்வு முகமை மே 31, ஜூன் 6 மற்றும் 7-ம் தேதிகளுக்கு மாற்றியுள்ளது.

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் இளநிலை க்யூட் 2026 தேர்வுகள் நேற்று முதல் நடைபெறுவதாக இருந்தது. பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டதால், நேற்று முதல் நடைபெறுவதாக இருந்த இளநிலை க்யூட் தேர்வை மே 31, ஜூன் 6 மற்றும் ஜூன் 7-ம் தேதிகளுக்கு தேசிய தேர்வு முகமை மாற்றியுள்ளது.

மே 31-ம் தேதி நடைபெறும் க்யூட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதை cuet.nta.nic.in என்ற இணையளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஜூன் 6 மற்றும் 7-ம் தேதி தேர்வு எழுதுபவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என என்டிஏ தெரிவித்துள்ளது.

இளநிலை க்யூட் தேர்வு தேதி மாற்றம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
பக்ரீத் பண்டிகையில் ராஜஸ்தான் முஸ்லிம்களின் வித்தியாசமான முயற்சி: பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி தேசிய அளவில் கையெழுத்து இயக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in