சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
Updated on: 
1 min read

சென்னை: சித்தா, ஆயுர்​வேதம், யுனானி, ஓமியோபதி படிப்​பு​களில் காலியாகவுள்ள 1,030 இடங்​களுக்கு ஆன்லைனில் விண்ணப்​பிக்க இன்று கடைசி நாளாகும்.

தமிழகத்​தில் உள்ள அரசு மற்​றும் தனியார் கல்​லூரிகளில் உள்ள சித்தா, ஆயுர்​வேதம், யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்​எஸ், பிஏஎம்​எஸ், பியுஎம்​எஸ், பிஎச்​எம்​எஸ்) படிப்​பு​களுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்​தாய்வு 3 கட்​டங்​களாக நடை​பெற்​றது.

இந்​நிலை​யில், மூன்று கட்ட கலந்​தாய்வு முடி​வில் 540 அரசு ஒதுக்​கீட்டு இடங்​கள், 160 அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்கள், 330 நிர்​வாக இடங்​களும் காலியாக உள்​ளன. நீட் தேர்வு மதிப்​பெண் அடிப்​படை​யில் நிரப்​பப்​படும் அந்த இடங்​களில் சேர விரும்​புவோர் www.tnayushselection.org என்ற இணை​யதளம் மூலம் இன்று மாலை 5 மணிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும்.

அதில் அரசு இடங்​கள், அகில இந்​திய இடங்கள், நிர்​வாக இடங்​களுக்கு தனித்தனியே விண்​ணப்​பிக்க வேண்​டும் என இந்​திய மருத்​துவம் மற்​றும் ஓமியோப​தி துறை கூறியுள்ளது.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
“இறைவன் அனைவருக்கும் உரியவர்” - அயோத்தி பயணம் குறித்து அகிலேஷ் யாதவ் கருத்து

X