ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு

Updated on
1 min read

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்​ட​தாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகு​தித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தில் டெட் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுகளை சுமார் 4.2 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இத்தேர்வுகளின் முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை http://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறியலாம். மேலும் பிப்.2-ம் தேதி முதல் சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை வெளியீடு... மொத்​தம் 150 மதிப்​பெண்​கள் கொண்ட டெட் தேர்​வில் தேர்ச்சி பெற பொதுப் பிரி​வினர் 60 சதவீத மதிப்​பெண்​ணும் (90), இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினர் 55 சதவீத​மும் (82) எடுக்க வேண்​டும்.

இந்​நிலை​யில், ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, ஒடிசா மாநிலங்​களைப் பின்​பற்றி தமிழகத்​தி​லும் இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினருக்கு டெட் தேர்ச்சி மதிப்​பெண் 5 சதவீதம் குறைக்​கப்​பட்​டு, அதற்​கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது நினைவுகூரக்கத்தக்கது.

<div class="paragraphs"><p>ஆசிரியர் தகுதித் தேர்வு</p></div>
தங்கம் விலை பவுனுக்கு ரூ.7600 சரிவு; வெள்ளி கிராமுக்கு ரூ.55 குறைவு - இன்றைய நிலவரம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in