தமிழ்நாடு வேளாண்மை பல்கலை. மாணவர் சேர்க்கை: ஜூன் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை. மாணவர் சேர்க்கை: ஜூன் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

கோவை: தமிழ்​நாடு வேளாண்மை பல்​கலைக்​கழகத்​தில் இளங்​கலை அறி​வியல் மற்​றும் வேளாண் தொழில்​நுட்ப படிப்​பு​களுக்கு விண்​ணப்​பிக்க அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, வேளாண்​மைப் பல்​கலைக்​கழகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு வேளாண்மை பல்​கலைக்​கழகம் மற்​றும் அண்​ணா​மலைப் பல்​கலைக்​கழக வேளாண்மை பிரிவுக்​கும் ஒரே இணை​யதள விண்​ணப்​பம் வழி​யாக இளமறி​வியல் மாணவர் சேர்க்கை நடை​பெறுகிறது.http://tnau.ucanapply.com என்ற ஒரு​மித்த இணை​யதள விண்​ணப்​பத்​தின் மூலம் வரும் ஜூன் 8-ம் தேதி வரை பூர்த்தி செய்து விண்​ணப்​பிக்​கலாம்.

மாணவர் சேர்க்​கைக்​கான வழி​முறை​கள், கலந்​தாய்​வுக்​குரிய தேதி மற்​றும் செயல்​முறை​கள் அனைத்​தும் உடனுக்​குடன் இணை​யத்​தில் வெளி​யிடப்​படும். இளமறி​வியல் வேளாண்​மை, தோட்​டக்​கலை படிப்​பு​களுக்கு தமிழ் வழி​யிலும் விண்​ணப்​பிக்​கலாம். வனவியல், உணவு மற்​றும் ஊட்​டச்​சத்து உணவு முறை, பட்டு வளர்ப்​பு, வேளாண் வணிக மேலாண்மை ஆகிய இளமறி​வியல் பாடங்​களும், வேளாண்மை தொழில்​நுட்​பக் கல்வி பாடப்​பிரிவு​களான வேளாண் பொறி​யியல், உணவுதொழில்​நுட்​பம், உயி​ரித் தொழில்​நுட்​பம், ஆற்​றல் மற்​றும் சுற்​றுச்​சூழல் பொறி​யியல், உயி​ரித் தகவலியல் மற்​றும் வேளாண்மை தகவல் தொழில்நுட்​பம் ஆகிய 14 இளமறி​வியல் பட்​டப்​படிப்​பு​களுக்கு ஒரேயொரு இணை​ய​ வழி விண்​ணப்​பம் மட்​டும் போது​மானது.

சேர்க்கை எண்ணிக்கை: வரும் கல்​வி​யாண்​டில் உறுப்பு கல்​லூரி​களில் மாணவர் சேர்க்​கைக்​கான எண்​ணிக்கை 2,516 ஆகவும், இணைப்பு கல்​லூரி​களில் மாணவர் சேர்க்கை 4,736 ஆகவும் இருக்​கும். இதில் அரசாங்க இடஒதுக்​கீடு 3,051 மற்​றும் மேலாண்மை இடஒதுக்​கீடு 1,685 ஆகும். சிறந்த விளை​யாட்டு வீரர்​கள், முன்​னாள் ராணுவ வீரர்​கள், மாற்​றுத் திற​னாளி​கள், அரசு பள்​ளி​யில் பயின்ற மாணவர்​களுக்​கான 7.5 சதவீதம், தொழில்​முறை கல்வி பாடப்​பிரிவு, மூன்​றாம் பாலினத்​தவர் மற்​றும் அயலக வாழ் தமிழர்​கள் என சிறப்பு ஒதுக்​கீட்​டுக்​கான சேர்க்கை நடை​பெறும்.

விண்​ணப்​பக் கட்​ட​ணம் பொதுப்​பிரிவு, பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட மாணவர்​களுக்கு ரூ.600, ஆதி​தி​ரா​விடர், அருந்​த​தி​யர் மற்​றும் பழங்​குடி​யினருக்கு ரூ.300 ஆகும். தமிழ்​நாடு வேளாண்மை பல்​கலைக்​கழக பாடங்​களுக்​கான விவரங்​களை 9488635077, 9486425076 என்ற செல்​போன் எண்​களி​லும், ugadmissions@tnau.in என்ற மின்​னஞ்​சல் மூல​மாக​வும், வார நாட்​களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு அறிய​லாம்.

அண்​ணா​மலைப் பல்​கலைக்​கழகத்​தில் இளமறி​வியல் வேளாண்​மை, வேளாண்மை சுய​சார்பு மற்​றும் தோட்​டக்​கலை பிரி​வில் 340 இடங்​கள் உள்​ளன. இந்த பாடங்​களுக்​கான விவரங்​களை 9865703537, 9442029913 என்ற செல்​போன் எண்​களி​லும், agridean2015@gmail.com மூல​மாக​வும் தெரிந்​து​கொள்​ளலாம். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை. மாணவர் சேர்க்கை: ஜூன் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்க அழைப்பு
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்: திட்டமிட்டபடி இன்று பதவியேற்பு விழா இல்லை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in