தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பட்டியல் வெளியீடு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்​களின் பெயர்ப் பட்​டியலை தேர்​வுத் துறை வெளியிட்​டுள்​ளது.

இது​குறித்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு தேர்வுத்துறை இயக்​குநரகம் அனுப்​பியுள்ள சுற்​றறிக்கை: “நடப்பு கல்வி ஆண்​டில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்​டியல் தயாரிக்​கப்​பட்டுள்​ளது. இதையொட்டி, எமிஸ் தளத்​தில் மாணவர்​களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்​படம், செல்​போன் எண், முகவரி உள்​ளிட்ட விவரங்​கள் சரியாக உள்​ளதா என்​பதை சரிபார்த்து திருத்​தம் செய்ய கடந்த நவ.25-ம் தேதி வரை அவகாசம் வழங்​கப்​பட்​டது.

தேர்​வுக் கட்​ட​ணம் செலுத்​தவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்​கெனவே அறி​வுறுத்​தப்​பட்​டது. இந்நிலையில், 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்​களின் பெயர்ப் பட்​டியல் தற்​போது வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசி​ரியர்​கள் www.dgeapp.tnschools.gov.in என்ற இணை​யதளத்​தில் டிச.5-ம் தேதிக்​குள் பதி​விறக்​கம் செய்து ​கொள்​ளலாம்.

அதில் அனைத்து மாணவர்​களின் பெயர்​களும் உள்​ளதா என்​பதை உறுதிப்​படுத்த வேண்​டும். பெயர், பிறந்த தேதி, புகைப்​படம் உள்ளிட்ட விவரங்​களில் திருத்​தம் இருந்​தால் இணையதளத்திலேயே மேற்​கொள்​ளலாம். பாலினம், பயிற்று மொழி, பாடத் தொகுப்பு உள்​ளிட்ட விவரங்​களில் திருத்​தம் தேவைப்​பட்​டால் சம்​பந்​தப்​பட்ட மாவட்ட தேர்​வுத் துறை இயக்குநர் அலு​வல​கத்தை அணுக வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பட்டியல் வெளியீடு
செங்கல்பட்டில் மதநல்லிணக்க ஊர்வலம்

X