திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா: 3 நாட்களுக்கு சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் அறிவிப்பு

திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா: 3 நாட்களுக்கு சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: திருத்​தணி​யில் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஆடி கிருத்​தி​கையை முன்​னிட்​டு, அரக்​கோணம் - திருத்​தணி இடையே 3 பாசஞ்​சர் சிறப்பு ரயில்​கள் இன்று (ஆக.5) முதல் இயக்​கப்பட உள்​ளன.

திருத்தணி சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் நடை​பெறும் ஆடி கிருத்​திகை விழாவை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து அரக்​கோணம் வரை இயக்​கப்​படும் ரயில்​கள், திருத்​தணி வரை நீட்​டிக்​கப்பட உள்​ளன.

அதன்​படி, அரக்​கோணம் - திருத்தணி இடையே ஆக.5 முதல் ஆக.7-ம் தேதி வரை 3 நாட்​களுக்கு பாசஞ்​சர் சிறப்பு மின்​சார ரயில்​கள் இயக்​கப்பட உள்​ளன.

அதன் விவரம்: அரக்​கோணத்​தில் இருந்து காலை 10.20, மதி​யம் 1.00, பிற்​பகல் 2.50 ஆகிய நேரங்​களில் சிறப்பு பாசஞ்​சர் ரயில்​கள் புறப்​பட்​டு, முறையே காலை 10.40, மதி​யம் 1.20, பிற்​பகல் 3.10 ஆகிய நேரங்​களில் திருத்​தணியை அடை​யும்.

இந்த ரயில்​கள் திருத்​தணி​யில் இருந்து காலை 10.50, மதி​யம் 1.30, பிற்​பகல் 3.20 ஆகிய நேரங்​களில் புறப்​பட்​டு, முறையே பகல் 11.10, மதி​யம் 1.48, பிற்​பகல் 3.38 ஆகிய நேரங்​களில் அரக்​கோணத்தை அடை​யும். இந்த தகவல் சென்னை ரயில்வே கோட்​டம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா: 3 நாட்களுக்கு சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் அறிவிப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வோம் என மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் சிறையில் அடைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in