ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வோம் என மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் சிறையில் அடைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வோம் என மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் சிறையில் அடைப்பு
Updated on
1 min read

சென்னை: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் தொடர்​புபடுத்தி கைது செய்து விடு​வ​தாக மிரட்​டி, தொழில​திபரிடம் ரூ.40 லட்​சம் பறித்த குற்​றச்​சாட்​டில் காவல் ஆய்​வாளர் மற்​றும் உடந்​தை​யாக இருந்த ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ சீனி​வாசன் ஆகியோர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

சென்னை பழைய வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்​தவர் அகில்​கு​மார். தொழில​திப​ரான இவர், சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் 2 தினங்​களுக்கு முன்​னர் புகார் அளித்​தார்.

அதில் கூறியிருப்பதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்​பாக காவல் ஆய்​வாளர் புகாரி என்னை அழைத்து விசா​ரணை நடத்​தி​னார்.

அப்​போது, அந்த வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட மொட்டை கிருஷ்ணன் பயன்​படுத்​திய செல்​போன் எண் ஆய்​வில், எனது பெயரில் வாங்​கப்​பட்ட சிம் கார்டு பயன்​படுத்​தப்​பட்​ட​தாகக் கூறி, வழக்​கில் என்​னை​யும் சேர்த்து கைது செய்து விடு​வ​தாக மிரட்​டி​னார்.

அந்த வழக்​கில் இருந்து காப்​பாற்ற வேண்​டுமெனில் ரூ.20 லட்​சம் லஞ்​சம் கொடுக்க வேண்​டும் என்று கூறி​னார். அச்​சத்​தில் அந்த தொகையை வழங்​கினேன். கடந்த 2 ஆண்​டு​களாக பல்​வேறு காரணங்​களைக் கூறி பலமுறை புகாரி பணம் பறித்​தார்.

அவர் பரங்​கிமலை காவல் ஆய்​வாள​ராக உள்ள நிலை​யில் 2 நாட்​களுக்கு முன்​பு எனது வீட்​டுக்கு வந்​து, போதைப்​பொருள் தொடர்​பாக சோதனை நடத்​தி​, மீண்​டும் ரூ.5 லட்​சம் தர வேண்​டும் என்று மிரட்​டி​னார்.

அதன்​படி பணத்தை தயார் செய்து யானைக​வுனி காவல் நிலை​யம் அருகே கொண்டு சென்று கொடுத்​தேன். எனவே, தொடர்ந்து என்னை மிரட்டி பணம் பறித்து வரும் காவல் ஆய்​வாளர் புகாரி மற்​றும் அவருடன் வந்​தவர்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று கூறி​யிருந்​தார்.

இதுகுறித்து உரிய விசா​ரணை நடத்த காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டார். அதன்​படி, பூக்​கடை காவல் துணை ஆணை​யர் கோபி தலை​மை​யில் நடத்​தப்​பட்ட துறைரீ​தி​யான விசா​ரணை​யில், புகாரில் கூறப்​பட்ட குற்​றச்​சாட்​டு​கள் உண்மை என தெரிய​வந்​தது.

இதையடுத்​து, புகாரி மீது யானைக​வுனி போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். உடனடி​யாக அவர் காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டதோடு நேற்று முன்​தினம் இரவு கைது செய்​யப்​பட்​டார். உடந்​தை​யாக இருந்த ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ சீனி​வாசன் என்​பவரும் கைது செய்​யப்​பட்​டார். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்​கில் புகாரி​யுடன் தொடர்​புடைய வேளச்​சேரி காவல் நிலைய ஆய்​வாளர் சரவணன் மீது துறை ரீதி​யான நடவடிக்​கையை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் மேற்​கொண்​டுள்​ளார்.

அதன்​படி, ஆய்​வாளர் சரவணன் காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். ஆய்​வாளர் சரவணன் அண்​ணாநகர் காவல் மாவட்​டத்​தில் பணி​யாற்​றிய போது தொழில் அதிபர் ஒரு​வரை மிரட்டி கடத்தி சென்று அவரது சொத்​துக்​களை அபகரித்த வழக்​கில் கைதாகி சிறைக்கு சென்​றவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வோம் என மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் சிறையில் அடைப்பு
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in