அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு: முன்னேற்பாடுகள் தீவிரம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அரை​யாண்டு விடு​முறை முடிந்து பள்​ளி​கள் இன்று (ஜன.5) திறக்​கப்பட உள்​ளன. இதற்​கான முன்​னேற்​பாட்டு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தைப் பின்​பற்​றும் அனைத்து வித​மான பள்​ளி​களி​லும் அரை​யாண்டு மற்​றும் 2-ம் பரு​வத்​தேர்வு டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடை​பெற்​றது. அதைத் தொடர்ந்து 24-ம் தேதி முதல் மாணவர்​களுக்கு அரை​யாண்டு விடு​முறை வழங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் பள்​ளி​கள் மீண்​டும் இன்று (ஜன.5) திறக்​கப்​பட்டு வகுப்​பு​கள் வழக்​கம்​போல் நடை​பெறவுள்​ளன.

இதையடுத்து பள்ளி திறப்​புக்​கான வளாக தூய்​மைப் பணி​கள் உள்​ளிட்ட முன்​னேற்​பாடு​கள் தற்​போது தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. பள்​ளி​கள் திறக்​கப்​பட்ட முதல் நாளி​லேயே மாணவர்​களுக்கு 3-ம் பரு​வத்​துக்​கான பாடநூல்​களை வழங்க வேண்​டும். அதே​போல், திருத்​தப்​பட்ட அரை​யாண்​டுத் தேர்வு விடைத்​தாள்​களை​யும் மாணவர்​களுக்குத் தரவேண்​டும்.

மேலும், மாணவர்​கள் பின்​தங்​கிய பாடங்​களில் கவனம் செலுத்​தி, அவர்​களின் தேர்ச்​சியை மேம்​படுத்த பாட ஆசிரியர்​கள் தகுந்த நடவடிக்கை வேண்​டும். நடத்​தப்​ப​டாத பாடங்​களை துரித​மாக நடத்தி முடிக்க வேண்​டும் என்று ஆசிரியர்​களுக்கு பள்​ளிக் கல்​வித்​துறை சார்​பில் அறி​வுறுத்​தல்​கள்​ வழங்​கப்​பட்​டுள்​ளன.

கோப்புப்படம்
பொருத்தமற்ற தேதிகள், ஏசி ரயில்களாக இயக்கப்படுவதால் சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு மந்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in