பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு: புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய உத்தரவு

பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு: புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்​ளி​களில் எஸ்​எம்சி பதவிக்​காலம் முடிவ​தால் புதிய உறுப்​பினர்​களை செப்​டம்​பர், அக்​டோபர் மாதங்​களில் தேர்வு செய்ய வேண்​டும் என பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​தரமோகன் வெளி​யிட்ட அரசாணை: தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் இயங்​கிவரும் பள்ளி மேலாண்​மைக் குழுக்​கள் (எஸ்​எம்​சி) கடந்த 2024-ம் ஆண்டு மறுகட்​டமைப்பு செய்​யப்​பட்​டது.

அதன்​படி, பெற்​றோர், ஆசிரியர்​கள், உள்​ளாட்​சிப் பிர​தி​நி​தி​கள் மற்​றும் முன்​னாள் மாணவர்​களை உள்​ளடக்​கிய 20 உறுப்​பினர்​கள் கொண்ட குழு​வாக எஸ்​எம்சி மாற்றி அமைக்​கப்​பட்டு சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறது. அதில் கற்​றல், சேர்க்​கை, மேலாண்மை தொடர்​பாக தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்டு தொடர் நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன. ஏற்​கெனவே நியமிக்​கப்​பட்ட பள்ளி மேலாண்​மைக் குழு​வின் பதவிக்​காலம் இந்த மாதத்​துடன் நிறைவடைய உள்​ளது.

இதையடுத்து, 2026-28-ம் ஆண்​டு​களுக்​கான எஸ்​எம்சி குழு​வுக்கு புதிய உறுப்​பினர்​களை தேர்வு செய்​வதற்​கான நடை​முறை​கள் தற்​போது வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, பள்ளி மேலாண்​மைக் குழு​வின் புதிய உறுப்​பினர்​களை செப்​டம்​பர், அக்​டோபர் மாதங்​களில் தேர்ந்​தெடுக்க வேண்​டும். இதற்​கான பெற்​றோர் விழிப்​புணர்​வுக் கூட்​டம் ஆகஸ்ட் 29-ம் தேதி நடத்​தப்பட வேண்​டும்.

அதைத் தொடர்ந்து எஸ்​எம்சி மறுகட்​டமைப்பு பணி​கள் தொடக்​கப் பள்​ளி​களில் செப்​டம்​பர் 12, 19-ம் தேதி​களி​லும், நடுநிலைப் பள்​ளி​களில் செப்​டம்​பர் 26-ம் தேதி​யும், உயர்​நிலை, மேல்​நிலைப் பள்​ளி​களில் அக்​டோபர் 10-ம் தேதி​யும் மேற்​கொள்ள திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்​கான வழி​காட்​டு​தல்​களை பின்​பற்றி செயல்பட வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு: புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய உத்தரவு
காந்தம் போன்று முதலீடுகளை ஈர்க்க வேண்டும்: விண்வெளித் துறைக்கு பிரதமர் புகழாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in