மாணவர்களின் கேள்வி கேட்கும் திறனை வளர்க்க அரசு பள்ளிகளில் புதுப்பொலிவுடன் விநாடி-வினா மன்றம்

பள்ளிக்கல்வித் துறை வழிகாட்டுதல்கள் வெளியிட்டது
பள்ளிக்கல்வித் துறை
பள்ளிக்கல்வித் துறை
Updated on: 
1 min read

சென்னை: அரசு பள்​ளி​களில் விநாடி-​வினா மன்​றம் “சொல்! வெல்!’ என்ற புதிய அடை​யாளத்​துடன் செயல்​படுத்​தப்பட உள்​ளது. இதற்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக் கல்​வித்​துறை வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக் கல்வி இயக்​குநர் (பொறுப்​பு) ந.லதா அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை: அரசு பள்​ளி​களில் செயல்​பட்டு வரும் விநாடி- வினா மன்​றம் “சொல்! வெல்!’ என்ற புதிய அடை​யாளத்​துடன் வலுப்​படுத்​தப்​பட்டு புதிய உற்​சாகத்​துடன் செயல்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. மாண​வர்​களின் பொது அறிவை விரி​வுபடுத்​து​வது, கேள்வி கேட்​கும் திறனை வளர்ப்​பது, தகவல்​களை தொடர்​படுத்தி சிந்​திக்​கும் திறனை உரு​வாக்​கு​வது ஆகிய​வையே இம்​மன்​றத்​தின் நோக்​கங்​களாகும்.

எனவே, விநாடி-வினா போட்​டிகளில் பங்​கேற்​கும் சில மாண​வர்​களுக்​காக மட்​டுமின்றி 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் ஒவ்​வொரு மாண​வ​ரும் கேள்வி கேட்​டு, கற்​று, சிந்​தித்து மேற்​குறிப்​பிட்ட நோக்​கங்​களை அடை​யும் வகை​யில் இந்த மன்​றத்​தின் செயல்​பாடு​கள் அமைய வேண்​டும். விநாடி- வினா மன்​றச் செயல்​பாடு​கள் மூல​மாக அனைத்து மாண​வர்​களுக்​கும் சமமான கற்​றல் மற்​றும் பயிற்சி வாய்ப்பை உறுதி செய்​யும் வகை​யில் தரப்​படுத்​தப்​பட்ட கற்​றல் வளங்​களை வடிவ​மைத்து ‘எமிஸ்’ தளத்​தில் பதிவேற்​றம் செய்ய திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்த வளங்​களை ஒவ்​வொரு வகுப்​புக்​கான விநாடி-​வினா மன்​றத்​தின் பொறுப்​பாசிரியர் பதி​விறக்​கம் செய்து கொண்டு விநாடி- வினா மன்​றப் பாடவேளை​யின்​போது செயல்​படுத்த வேண்​டும். விநாடி-​வி​னா​வின் பல்​வேறு கேள்வி வடிவங்​கள், விநாடி- வினா நடத்​தும் முறை​கள் மற்​றும் பல்​வேறு சுற்​றுகளுக்கு மாண​வர்​களைப் பள்ளி நிலை​யி​லிருந்தே அறி​முகப்​படுத்​தும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இதன்​மூலம் மாநில அளவி​லான வினாடி-​வினா போட்​டிகளில் மாண​வர்​கள் எதிர்​கொள்​ளும் கேள்வி வடிவங்​கள் மற்​றும் சுற்​றுகள், அவர்​களுக்கு முற்​றி​லும் புதிய அனுபவ​மாக இல்​லாமல், ஏற்​கெனவே பள்ளி அளவிலேயே அறி​முக​மாகி பயிற்சி பெற்ற ஒன்​றாக அமைய வாய்ப்​பாக இருக்​கும். பள்​ளி​களில் “சொல்! வெல்!’ விநாடி-​வினா மன்​றம், போட்​டிக்​கான பயிற்சி மைய​மாக மட்​டுமின்றி கேள்வி கேட்​கும், சிந்​திக்​கும் மாண​வர் சமூகத்தை உரு​வாக்​கும் கற்​றல் தளமாக செயல்பட வேண்​டும். இது தங்​களது பள்​ளி​யில் முனைப்​புடன் செயல்​படுத்​தப்​படு​வதை உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

பள்ளிக்கல்வித் துறை
ரியாத் விமான நிலைய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு: 11 இந்தியர்கள் உட்பட 300 பேர் படுகாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in