கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் 25-ம் தேதி முதல் தொடக்கம்

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ​தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகத்​தின் கீழ் சென்​னை, நாமக்​கல், திருநெல்​வேலி, ஒரத்​த​நாடு, சேலம் தலை​வாசல், உடுமலைப்​பேட்​டை, தேனி வீர​பாண்டி ஆகிய 7 இடங்​களில் கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​கள் உள்​ளன.

இந்த கல்​லூரி​களில் ஐந்​தரை ஆண்​டு​கள் கொண்ட கால்​நடைமருத்​து​வம் மற்​றும் பராமரிப்பு படிப்​புக்கு (பி.​வி.எஸ்​சி. - ஏ.ஹெச்) 660 இடங்​கள் இருக்​கின்​றன. இதில், அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு இடங்​கள் 15 சதவீதம் ஒதுக்​கப்​படு​கின்​றன. திரு​வள்​ளூர் மாவட்​டம் கோடு​வேளி​யில் உள்ள உணவு மற்​றும் பால்​வளத் தொழில்​நுட்​பக் கல்​லூரி​யில் உணவுத் தொழில்​நுட்ப பட்​டப்​படிப்​புக்கு (பி.டெக்) 60 இடங்​கள், பால்​வளத் தொழில்​நுட்ப பட்​டப்​படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் இருக்​கின்​றன. இதில், உணவுத் தொழில்​நுட்ப படிப்​பில் 6 இடங்​கள் மற்​றும் பால்​வளத் தொழில்​நுட்ப படிப்​பில் 3 இடங்​கள் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு ஒதுக்​கப்​படு​கிறது.

இதே​போல், ஓசூர் மத்​தி​கிரி​யில் உள்ள கோழி​யின உற்​பத்தி மற்​றும் மேலாண்​மைக் கல்​லூரி​யில் கோழி​யின தொழில்​நுட்ப பட்​டப்​படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள், உணவு தொழில்​நுட்ப பட்​டப்​படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் உள்​ளன. அதே​போல், சேலம் மாவட்​டம் தலை​வாசல் பகு​தி​யில் உள்ள இணைப்பு கல்​லூரி​யில் உணவுத் தொழில்​நுட்ப பட்​டப்​படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள், பால்​வளத் தொழில்​நுட்ப பட்​டப்​படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் இருக்​கின்றன இந்த 3 பி.டெக் பட்​டப்​படிப்​பு​களும் 4 ஆண்​டு​கள் கொண்​டது.

இந்​நிலை​யில், பி.​வி.எஸ்​சி- ஏ.ஹெச் மற்​றும் பி.டெக் படிப்​பு​களுக்கு 2026- 27-ம் கல்​வி​யாண்டு மாணவர் சேர்க்​கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணை​யதளத்​தில் விண்​ணப்​பிப்​பது வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்​கு​கிறது. ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். அயல்​நாடு வாழ் இந்​தி​யர், அயல்​நாடு வாழ் இந்​தி​யரின் வாரிசுகள், அயல்​நாடு வாழ் இந்​தி​யரின் நிதி ஆதரவு பெற்​றோர் மற்​றும் அயல்​நாட்​டினர் ஆகியோருக்​கான இடஒதுக்​கீடு, இணை​யதள விண்​ணப்ப வழி​முறை​கள் மற்​றும் இதர விபரங்​களை​யும் இணை​யதளத்​தில் பார்த்து அறிந்து கொள்​ளலாம்.

இந்த படிப்​பு​களுக்கு பிளஸ்2 மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடை​பெறுகிறது என்று தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகம் தெரி​வித்​துள்​ளது. மேலும் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டின் கீழ் அரசு பள்ளி மாணவர்​களுக்கு பி.​வி.எஸ்சி - ஏ.ஹெச் மற்​றும் பி.டெக் படிப்​பு​களில் 100-க்​கும் மேற்​பட்ட இடங்​கள்​ ஒதுக்​கீடு செய்​யப்​படு​கின்​றன.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்க முதல்வர் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in