ஜனவரி 25-ல் சிமேட் தேர்வு: என்டிஏ அறிவிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: நாடு முழு​வதும் உள்ள மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் அகில இந்​திய தொழில்​நுட்​பக் கல்வி குழு​மத்​தின் (ஏஐசிடிஇ) கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் மேலாண்மை படிப்​பு​களில் சேர, பொது நிர்​வாக நுழைவுத் தேர்​வில் (சிமேட்) கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும்.

ஆண்​டு​தோறும் இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) கணினி வழியில் நடத்​துகிறது. இந்த ஆண்டு சிமேட் தேர்​வுக்​கான அறி​விப்​பாணை கடந்த அக்​டோபரில் வெளி​யானது.

அதை தொடர்ந்​து, இணை​யதள விண்​ணப்ப பதிவு அக்​டோபர் 17 முதல் நவம்​பர் 25-ம் தேதி வரை நடை​பெற்​றது. நாடு முழு​வதும் சுமார் 75 ஆயிரம் பேர் வரை விண்​ணப்​பித்​தனர்.

இந்​நிலை​யில், தேர்​வுக் கால அட்​ட​வணையை என்​டிஏ தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, ஜனவரி 25-ம் தேதி சிமேட் தேர்வு நடை​பெற உள்​ளது.

தேர்​வுக்​கான ஹால் டிக்​கெட் வெளி​யீடு உள்​ளிட்ட கூடு​தல் விவரங்​களை www.nta.ac.in எனும் இணை​யதளத்​தில் அறியலாம்.

ஏதேனும் சந்​தேகம் இருந்​தால் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்​லது cmat@nta.ac.in மின்​னஞ்​சல் வாயி​லாக தொடர்பு கொண்டு விளக்​கம் பெறலாம் என்று என்​டிஏ தெரி​வித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
அரசால் ஏற்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாணை கேட்டு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in