9-ம் வகுப்பு கணிதப் பாடத்தில் எந்தத் தலைப்பும் நீக்கவில்லை: என்சிஇஆர்டி விளக்கம்

9-ம் வகுப்பு கணிதப் பாடத்தில் எந்தத் தலைப்பும் நீக்கவில்லை: என்சிஇஆர்டி விளக்கம்
Updated on: 
1 min read

சென்னை: தேசி​யக் கல்​வி​யியல் ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி நிறு​வனம்​(என்சிஇஆர்டி) வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: 9-ம் வகுப்பு கணிதப் பாடத்​திட்​டத்​தில் இருந்து எந்​தவொரு ஒட்​டுமொத்த தலைப்​பும் நீக்​கப்​பட​வில்​லை. மாணவர்​கள் வெறும் மனப்​பாடம் செய்​வதைத் தவிர்த்​து, கருத்​தி​யல் ரீதி​யாகப் புரிந்​து​கொள்​ளும் வகை​யில் பாடங்​கள் மாற்றி அமைக்​கப்​பட்​டுள்​ளன. குறிப்​பாக, கோடு​கள் மற்​றும் கோணங்​கள், யூக்​ளிடியன் வடிவ​வியல் போன்ற பாடங்​கள் தனி​யாக இல்​லாமல், 5, 6, 9, 12, 13 ஆகிய அத்​தி​யா​யங்​களுக்​குள் விரி​வாக சேர்க்​கப்​பட்​டுள்​ளன.

பாரம்​பரிய​மான தேற்​றம் மற்​றும் நிரூபணங்​களுக்​குப் பதிலாக, செயல்​முறை வழிக் கற்​றலுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல், செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் தற்​போதைய கால​கட்​டத்​தில், அல்​காரிதம்​கள், தரவு அமைப்​பு​கள் ஆகிய​வற்​றின் அடிப்​படைக் கணிதத்தை மாணவர்​கள் தெரிந்​து​கொள்​வது அவசி​ய​மாகும்.

எனவே, தேசிய கல்விக் கொள்கை பரிந்​துரை​யின்​படி, 9-ம் வகுப்பு கணிதத்​தில் ‘அல்​காரிதம்​கள்’ குறித்த புதிய அத்​தி​யா​யம் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது வெளி​யாகி இருப்​பது வெறும் ‘வரைவுப் பாடத்​திட்​டம்’ மட்​டும்​தான். ஆசிரியர்​கள், கல்​வி​யாளர்​களிடம் இருந்து பெறப்​பட்ட கருத்​துகளின் அடிப்​படை​யில் திருத்​தப்​பட்ட இறு​திப் பாடத்​திட்​டம் அடுத்த அக்​டோபரில் வெளி​யிடப்​படும்.

மேலும், தேசி​யக் கல்விக் கொள்​கை​யின்​படி கல்​வி​யானது திறன் சார்ந்​த​தாக இருக்க வேண்​டும். எனவே பள்​ளி​கள் மற்​றும் ஆசிரியர்​கள், பாடப்​புத்​தகத்​தில் உள்ள தலைப்​பு​களின் எண்​ணிக்​கையை மட்​டும் வைத்​துப் பாடத்​திட்​டத்தை எடை​போட வேண்​டாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

சமீபத்​தில் வெளி​யான 9-ம் வகுப்​புக்​கான என்​சிஇஆர்டி வரைவுப் பாடத்​திட்​டத்​தில் யூக்​ளிடியன் வடிவ​வியல் உட்பட சில முக்​கியக் கணிதப் பாடங்​கள் நீக்​கப்​பட்​டு​விட்​ட​தாக தகவல்​கள் பரவியதை அடுத்து என்​சிஇஆர்டி இந்த விளக்​கத்தை வெளி​யிட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

9-ம் வகுப்பு கணிதப் பாடத்தில் எந்தத் தலைப்பும் நீக்கவில்லை: என்சிஇஆர்டி விளக்கம்
மதுராந்தகம் கூட்டத்தில் ‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கு குறித்து பேச்சு: முதல்வர் விஜய் மீது திமுக புகார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in