2018-19-க்கு பிறகு சேர்ந்த மாணவர்களிடம் அரியர் தேர்வுக்கு அபராத கட்டணம் வசூல்: சென்னை பல்கலைக்கழகம் முடிவு

2018-19-க்கு பிறகு சேர்ந்த மாணவர்களிடம் அரியர் தேர்வுக்கு அபராத கட்டணம் வசூல்: சென்னை பல்கலைக்கழகம் முடிவு
Updated on
1 min read

சென்னை: சென்னை பல்​கலைக்​கழக தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் (பொறுப்​பு) சி.அருள்​வாசு, இணைப்பு அங்​கீ​காரம் பெற்ற கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டு மற்​றும் அதற்கு பின்​னர் கல்​லூரி​களில் சேர்ந்த இளங்​கலை, முதுகலை மற்​றும் தொழில்​சார் படிப்​பு​களில் சேர்ந்து அரியர் வைத்​துள்ள மாணவர்​களுக்​கு, மேலும் ஒரு வாய்ப்பு வழங்​கலாம் என பல்​கலைக்​கழக சிண்​டிகேட் கூட்​டத்​தில் தீர்​மானிக்​கப்​பட்​டது.

அரியர் தேர்​வு​கள் ஏப்​ரல் மாதம் நடத்​தப்பட உள்​ளன. அரியர் தேர்வு எழுதும் மாணவர்​களிட​மிருந்து வழக்​க​மான தேர்வு கட்​ட​ணத்​துடன் கூடு​தலாக அபராத கட்​ட​ண​மாக இளங்​கலை படிப்​புக்கு ரூ.7 ஆயிர​மும், முதுகலை படிப்​புக்கு ரூ.9 ஆயிர​மும், தொழில்​சார் படிப்​புக்கு ரூ.12 ஆயிர​மும் வசூலிக்​கப்​படும்.

ஏப்​ரல் மாதம் நடத்​தப்பட உள்ள அரியர் தேர்​வு​கள் குறித்து தேர்​வர்​களுக்கு தகவல் தெரிவிக்​கு​மாறு கல்​லூரி​களின் முதல்​வர்​கள் அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

2018-19-க்கு பிறகு சேர்ந்த மாணவர்களிடம் அரியர் தேர்வுக்கு அபராத கட்டணம் வசூல்: சென்னை பல்கலைக்கழகம் முடிவு
பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in