பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பொதுத் தேர்வு பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு (அரியர்) மார்ச் 2 முதல் 27-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

இதில் பிளஸ் 2 தேர்வை பள்ளி மாணவர்கள் 7,99,692, தனித் தேர்வர்கள் 27,783 என 8,27,475 பேர் எழுதவுள்ளனர். அதேபோல், பிளஸ் 1 அரியர் தேர்வை பள்ளி மாணவர்கள் 19,107 மற்றும் தனித் தேர்வர்கள் 5,944 என 25,051 பேர் வரை எழுதுகின்றனர்.

இந்நிலையில், பிளஸ் 2, பிளஸ் 1 அரியர் பாடத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நேற்று மதியம் வெளியானது.

இதையடுத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தேர்வுத் துறையின் http://dgeapp.tnschools.gov.in/ எனும் வலைத் தளத்தில் சென்று மாணவர்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.

அதில் மாணவர்கள் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்து பின்னர் அவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.

ஒரே ஹால்டிக்கெட்: அதே நேரம், தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in எனும் வலைத்தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

ஹால்டிக்கெட்டில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை மாவட்ட தேர்வுத் துறை அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு
கொளத்தூரில் 2007 பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in