ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி மருத்துவக் கல்லூரிக்கான அனுமதி ரத்து

போதிய வசதிகள் இல்லாததால் தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி மருத்துவக் கல்லூரிக்கான அனுமதி ரத்து
Updated on
1 min read

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் ரீசி பகு​தி​யில் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி மருத்​து​வக் கல்​லூரி உள்​ளது. இங்கு 2025- 2026ம் கல்வி ஆண்​டில் 50 மாணவர்​களை எம்​பிபிஎஸ் படிப்​பில் சேர்க்க, கடந்த 2024ம் ஆண்டு டிசம்​பர் 5ம் தேதி கல்​லூரி நிர்​வாகம் விண்​ணப்​பம் செய்​தது.

அதன்​ பின்​னர் விண்​ணப்​பத்தை ஆய்வு செய்த தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்​எம்​சி) எம்​பிபிஎஸ் படிப்பு தொடங்க கடந்த 2025ம் ஆண்டு செப்​டம்​பர் 8ம் தேதி மருத்​து​வக் கல்​லூரிக்கு அனு​மதி வழங்​கியது. எனினும் பல்​வேறு நிபந்​தனை​கள் விதிக்​கப்​பட்​டன. இதையடுத்து அக்கல்​லூரி​யில் 50 எம்​பிபிஎஸ் இடங்​களுக்கு மாணவர் சேர்க்கை நடை​பெற்​றது.

அதன்​ பின் கல்​லூரியைப் பற்றி பல்​வேறு புகார்​கள் எழுந்​தன. இதுகுறித்து என்​எம்பி ஆய்வு மற்​றும் ரேட்​டிங் வாரிய அதி​காரி​கள் கல்​லூரி​யில் திடீர் சோதனை மேற்​கொண்​டனர். அப்​போது போதிய வசதி​கள் இல்​லாமை, போதிய ஆசிரியர்​கள் இல்​லாமை போன்ற பல்​வேறு தவறுகள் தெரிய வந்​தன. இதையடுத்​து, அந்தக் கல்​லூரிக்கு வழங்​கப்​பட்ட அனு​ம​தியை வாரி​யம் ரத்து செய்​தது.

இது குறித்து என்​எம்சி வாரி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி மருத்​து​வக் கல்​லூரி​யில் தற்​போது பயின்று வரும் 50 மாணவர்​கள், மற்ற மருத்​து​வக் கல்​லூரி​களில் சேர்க்​கப்​படு​வார்​கள். எனவே, 2025- 2026 கல்​வி​யாண்​டில் சேர்ந்த மாணவர்​கள் யாரும், எம்​பிபிஎஸ் படிப்பை இழக்க மாட்​டார்​கள்​” என்​று தெரி​வித்​துள்​ளது.

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி மருத்துவக் கல்லூரிக்கான அனுமதி ரத்து
வெனிசுலாவிடம் இருந்து 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கிடைக்கும்: ட்ரம்ப் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in