வெனிசுலாவிடம் இருந்து 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கிடைக்கும்: ட்ரம்ப் தகவல்

வெனிசுலாவிடம் இருந்து 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கிடைக்கும்: ட்ரம்ப் தகவல்
Updated on
1 min read

கராகஸ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைளத்தில் கூறி​யுள்​ள​தாவது: வெனிசுலா​வில் இருந்து 3 கோடி முதல் 5 கோடி வரை உயர்​ தர​மான கச்சா எண்​ணெய்யை வழங்க இடைக்​கால அரசின் அதி​காரி​கள் ஒப்​புக்​கொண்​டுள்​ளனர். இந்த கச்சா எண்​ணெய் கொள்​முதலை அவர்​கள் சந்தை விலை​யில் வழங்க முன்​வந்​துள்​ளனர். அந்​தப் பணம் அதிப​ராகிய என்​னால் கட்​டுப்​படுத்​தப்​படும்.

குறிப்​பாக, வெனிசுலா மற்​றும் அமெரிக்க மக்​களின் நலனுக்காகப் அந்த தொகை பயன்​படுத்​தப்​படும். வெனிசுலா​வில் இருந்து எண்​ணெய் சேமிப்பு கப்​பல்​கள் மூலம் எடுத்து வரப்​பட்டு நேரடி​யாக அமெரிக்​கா​வில் உள்ள சரக்கு இறக்​கும் தளங்​களுக்கு கொண்டு வரப்​படும். இவ்​வாறு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

போதைப் பொருள் குற்​றச்​சாட்​டு​களை எதிர்​கொள்​வதற்​காக வெனிசுலா அதிபர் நிக்​கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்​துள்​ளது. அமெரிக்​கா​வின் இந்த கைது நடவடிக்​கை​யில் 24 வெனிசுலா பாது​காப்பு அதி​காரி​கள் கொல்​லப்​பட்​ட​தாக தகவல் வெளி​யான நிலை​யில் இந்த அறி​விப்பு வெளி​யாகி உள்​ளது.

வெனிசுலா தொடர்​பாக எண்​ணெய் நிறு​வனங்​களின் நிர்வாகிகளு​டன் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் வெள்​ளிக்​கிழமை பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளார். இதில், எக்​ஸான், செவ்​ரான், கோனோகோ பிலிப்ஸ் நிறுவனங்களின் பிர​தி​நி​தி​கள் கலந்து கொள்​வார்​கள் என்று எதிர்பார்க்​கப்​படுகிறது.

வெனிசுலாவிடம் இருந்து 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கிடைக்கும்: ட்ரம்ப் தகவல்
சேலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in