ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர் தமினா கிரிஷ் உட்பட 14 பேர் முழு மதிப்பெண்

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர் தமினா கிரிஷ் உட்பட 14 பேர் முழு மதிப்பெண்
Updated on
1 min read

சென்னை: ஜேஇஇ 2-ம் கட்ட முதன்​மைத் தேர்​வில் தமிழகத்​தைச் சேர்ந்த மாணவர் தமினா கிரிஷ் உட்பட 14 பேர் முழு மதிப்​பெண் பெற்று சாதனை படைத்​துள்​ளார்.

நம்​நாட்​டில் ஐஐடி, என்​ஐடி போன்ற மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலை படிப்​பு​களில் சேர ஒருங்​கிணைந்த நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்​டும். இவை ஜேஇஇ முதன்​மைத் தேர்​வு, பிர​தானத் தேர்வு என இரு பிரி​வாக நடை​பெறும்.

இதில் முதன்​மைத் தேர்​வானது தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) சார்​பில் ஆண்​டு​தோறும் 2 கட்​டங்​களாக நடத்​தப்​பட்டு வரு​கிறது. அதன்​படி 2026-27-ம் கல்​வி​யாண்​டுக்​கான ஜேஇஇ முதல்​கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 21 முதல் 28-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது.

இந்த தேர்வை சுமார் 13 லட்​சம் பேர் எழு​தினர். இதன் முடிவு​கள் பிப்​ர​வரி 16-ம் தேதி வெளி​யிடப்​பட்​டன. இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்​டத் தேர்வு ஏப்​ரல் 2 முதல் 8-ம் தேதி வரை நடை​பெற்​றது. இந்த தேர்வை நாடு முழு​வதும் 584 மையங்​களில் 10 லட்​சத்து 34,330 மாணவர்​கள் எழு​தினர்.

அதற்​கான தேர்வு முடிவு​கள் நேற்று முன்​தினம் இரவு வெளி​யானது. மாணவர்​கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணை​யதளத்​தில் சென்று தங்​கள் தேர்வு முடிவு​களை அறிய​லாம். இந்த தேர்​வில் மொத்​தம் 14 பேர் முழு மதிப்​பெண் பெற்று சாதனை படைத்​துள்​ளனர்.

தமிழகத்​தில் மாணவர் தமினா கிரிஷ் முழு மதிப்​பெண் பெற்​றுள்​ளார். இதுகுறித்த கூடு​தல் விவரங்​களை www.nta.ac.in என்ற இணை​யதளத்​தில் அறிய​லாம்.

ஏதேனும் சந்​தேகம் இருப்​பின் மாணவர்​கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்​லது jeemain@nta.ac.in எனும் மின்​னஞ்​சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்​கம் பெறலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

இவ்​விரு தேர்​வு​களில் மாணவர்​கள் பெற்ற அதிக மதிப்​பெண் அடுத்​தகட்ட ஜேஇஇ பிர​தானத் தேர்​வுக்கு கணக்​கில் கொள்​ளப்​படும். பிர​தானத் தேர்வு மே 17-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்கு தகு​தி​யான நபர்​கள் ஏப்​ரல் 23 முதல் மே 2-ம் தேதி முதல் விண்​ணப்​பிக்​கலாம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர் தமினா கிரிஷ் உட்பட 14 பேர் முழு மதிப்பெண்
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in