சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ பிரதான தேர்வு மே 17-ல் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும்.
இது ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதான தேர்வு என 2 கட்டமாகநடத்தப்படுகிறது. அதன்படி, 2026-க்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஜன.21 முதல் 30-ம் தேதி வரையும், ஏப்.1 முதல் 10-ம் தேதி வரையும் நடத்தப்பட உள்ளது.
இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கான பிரதான தேர்வு மே 17-ம் தேதி நடத்தப் பட உள்ளது.
நடப்பாண்டில் இந்த தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலமாக 23 ஐஐடிகளில் இடம் ஒதுக்கப்படும்.
இதுபற்றிய கூடுதல் விவரங்களை https://jeeadv.ac.in தளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.