பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புகளுக்கு உடனடி சேர்க்கை: சிப்பெட் நிறுவனம் அறிவிப்பு

பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புகளுக்கு உடனடி சேர்க்கை: சிப்பெட் நிறுவனம் அறிவிப்பு
hp
Updated on
1 min read

சென்னை: பிளாஸ்டிக் டெக்னாலஜி தொடர்பாக டிப்ளமோ படிப்புகளுக்கு உடனடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக மத்திய அரசின் சிப்பெட் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (சிப்பெட்) கல்வி நிறுவனம் சென்னை கிண்டி ஈக்காடுதாங்கல் திரு.வி.க. தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது. மத்திய அரசின் கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறையின் கீழ் இயங்கி வரும் இந்நிறுவனம், பிளாஸ்டிக் மோல்ட் இன்ஜினியரிங் டிப்ளமா, பிளாஸ்டிக் டெக்னாலஜி டிப்ளமோ, பிளாஸ்டிக் மோல்ட் டிசைன் முதுகலை டிப்ளமோ படிப்புகளை வழங்கி வருகிறது.

3 ஆண்டு கால டிப்ளமோ படிப்புகளில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்களும் ஒன்றரை ஆண்டு கால முதுகலை டிப்ளமோ படிப்பில் பாலிடக்னிக் பொறியியல் டிப்ளமோ முடித்தோரும் சேரலாம்.

மேற்கண்ட படிப்புகளுடன் லேட்ரல் என்ட்ரி முறையில் பிளாஸ்டி மோல்டு டெக்னாலஜி டிப்ளமோ, பிளாஸ்டிக் டெக்னாலஜி (படிப்புகளையும் வழங்கி வருகிறது . இரண்டு ஆண்டு கால இந்த படிப்புகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் ( இயற்பியல் வேதியியல், கணிதம் பாடங்கள் படித்தவர்கள்) எஸ்எஸ்எல்சி-யை தொடர்ந்து 2 ஆண்டு கால ஐடிஐ படிப்பில் டூல் அண்ட் டை, ஜெனரல் மெஷினிஸ்ட், டிராப்ட்ஸ்மேன், மெக்கானிக்கல், ஃபிட்டிங், பிளாஸ்டிக், பாலிமர், கெமிக்கல் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் படித்தோரும் சேரலாம்.

தற்போது மேலே குறிப்பிடப்பட்ட டிப்ளமோ, முதுகலை டிப்ளமா படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெற்று வருகிறது. இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் சிப்பெட் நிறுவனத்துக்கு நேரடியாகச் சென்று உடனடி சேர்க்கை பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94449-19183, 72992-98204 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என சிப்பெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புகளுக்கு உடனடி சேர்க்கை: சிப்பெட் நிறுவனம் அறிவிப்பு
இயக்குநர் பாக்யராஜின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in