ஐஐடி ‘சாஸ்த்ரா’ தொழில்நுட்ப விழா: ஜன.2-ம் தேதி தொடங்குகிறது

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்
ஐஐடி ‘சாஸ்த்ரா’ தொழில்நுட்ப விழா: ஜன.2-ம் தேதி தொடங்குகிறது
Updated on
1 min read

சென்னை: சென்னை ஐஐடியில் 2026-ம் ஆண்​டுக்​கான ‘சாஸ்த்​ரா’ தொழில்​நுட்​பக் கலை விழாவை மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் ஜன. 2-ம் தேதி தொடங்​கி வைக்கிறார்.

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மாணவர்​களின் தொழில்​நுட்​பத்திறன், படைப்​பாற்​றலை வெளிக்​கொண்​டு​வரும் வகை​யில் சென்னை ஐஐடியில் ஆண்​டு​தோறும் ‘சாஸ்த்​ரா’ தொழில்​நுட்ப விழா நடத்​தப்பட்டு வரு​கிறது.

அந்தவகை​யில், ‘2026 சாஸ்த்​ரா’ விழா ஜன.2-ம் தேதி தொடங்கி 6-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இந்த விழாவை மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் தொடங்கி வைக்கிறார். நாடு முழு​வதும் இருந்து 80 ஆயிரம் மாணவர்​கள் பங்​கேற்கின்றனர்.

80 வகை நிகழ்ச்​சிகள்: இதில் ரோபோடிக் சண்​டை, காது கேளாதோருக்​கான சிறப்பு தொழில்​ நுட்​பக் கருத்​தரங்​கு, செயற்கை நுண்​ணறிவு கருத்​தரங்​கு, இசை நிகழ்ச்​சிகள், ஐஐடி ஆராய்ச்​சிகள் தொடர்​பான கண்​காட்​சிகள் என 80 வகை​யான தொழில்​நுட்ப நிகழ்​வு​கள் இடம்​பெறுகின்​றன.

‘வெற்​றிப் படிக்​கட்​டு’ என்ற பெயரில் தமிழில் விநாடி-​வினா போட்டி நடத்​தப்​படு​கிறது. இந்த விழாவுக்கு தொழில் நிறு​வனங்​கள் ரூ.1.68 கோடி நன்​கொடை வழங்​கி​யுள்​ளன.

சாஸ்த்ரா நிகழ்​வு​களில் பங்​கேற்க விரும்​பும் மாணவர்​கள், பொது​மக்​கள் www.shaastra.org என்ற இணை​யதளம் மூல​மாக விண்​ணப்​பிக்​கலாம். நிகழ்ச்​சிகளைப் பார்க்க ஆன்​லைனில் உரிய கட்​ட​ணம் செலுத்தி நுழைவுச்​சீட்​டும் (பாஸ்) பெறலாம். விழா​வின்​போது, ஐஐடி குளோபல் ஃபவுண்​டேஷனை​யும் மத்​திய அமைச்​சர் ஜெய்​சங்​கர் தொடங்கி வைக்​கிறார்.

வெளி​நாடு​களில் உள்ள தொழில்​நுட்​பங்​கள், ஆராய்ச்​சிகளைப் பரி​மாறிக்​கொள்​ளும் வகை​யில் இது செயல்​படும். அமெரிக்​கா, ஜெர்​மனி, துபாய், மலேசி​யா​விலும் இந்த ஃபவுண்​டேஷன் தொடங்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

ஐஐடி ‘சாஸ்த்ரா’ தொழில்நுட்ப விழா: ஜன.2-ம் தேதி தொடங்குகிறது
அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை-செக்மேட் 2026’ - பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in