2027 ‘கேட்’ தேர்வை சென்னை ஐஐடி நடத்துகிறது

விண்ணப்ப பதிவு ஆகஸ்டில் தொடங்கும்
சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி
Updated on
1 min read

சென்னை: அடுத்த ஆண்​டுக்​கான ‘கேட்’ நுழைவுத் தேர்வை சென்னை ஐஐடி நடத்​துகிறது. இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஆகஸ்ட் 3-வது வாரத்​தில் தொடங்​கு​கிறது.

மத்​திய அரசின் கல்வி நிறு​வனங்​களில் எம்இ, எம்​டெக், எம்​எஸ்சி உள்​ளிட்ட முது​நிலைப் படிப்​பு​களில் சேர ‘கேட்’ (GATE) நுழைவுத் தேர்​வில் தேர்ச்சி பெறு​வது அவசி​யம். அதே​போல, ஒருசில தனி​யார் கல்வி நிறு​வனங்​கள், நிகர்​நிலைப் பல்​கலைக்​கழகங்​களும் கேட் தேர்வு மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடத்​துகின்​றன. மத்​திய அரசின் ஒருசில பொதுத் துறை நிறு​வனங்​கள் கேட் மதிப்​பெண் அடிப்​படை​யில் பணி நியமனங்​களை​யும் மேற்​கொள்​கின்​றன.

கேட் தேர்வு மதிப்​பெண் 3 ஆண்டுக்கு செல்​லத்​தக்​கது. கேட் நுழைவுத் தேர்வை ஒவ்​வொரு ஆண்​டும் ஏதேனும் ஒரு ஐஐடி அல்​லது ஐஐஎஸ்சி (இந்​திய அறி​வியல் நிறு​வனம்) நடத்​தும். அந்த வகை​யில், வரும் 2027-ம் ஆண்​டில் கேட் தேர்வு நடத்​தும் பொறுப்பு சென்னை ஐஐடி​யிடம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதைத் தொடர்ந்​து, 2027 கேட் நுழைவுத் தேர்​வுக்​கான அறி​விப்பை சென்னை ஐஐடி நேற்று வெளி​யிட்​டது. அதன்​படி, 2027 பிப்​.6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதி​களில் (சனி, ஞாயிறு) 30 பாடங்​களில் கேட் நுழைவுத் தேர்வு நடத்​தப்பட இருக்​கிறது. இத்​தேர்​வில் புதி​தாக ‘ரோ​போட்​டிக்ஸ் அண்ட் ஆட்​டோமேஷன்’ பாடம் சேர்க்​கப்படஉள்​ளது. தேர்​வுக்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஆகஸ்ட் 3-வது வாரத்​தில் தொடங்க உள்​ளது. முழு விவரங்​களை​யும் https://gate2027.iitm.ac.in என்ற இணை​யதளத்​தில் மாணவர்​கள் விரி​வாக அறிய​லாம் என்று சென்னை ஐஐடி அறி​வித்​துள்​ளது.

சென்னை ஐஐடி
முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது - நடந்தது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in