வேலைவாய்ப்பை ஏஐ பறிக்காது: சென்னை ஐஐடி வெள்ளை அறிக்கை வெளியீடு

வேலைவாய்ப்பை ஏஐ பறிக்காது: சென்னை ஐஐடி வெள்ளை அறிக்கை வெளியீடு
Updated on: 
1 min read

சென்னை: இந்​திய வேலை​வாய்ப்​பு​களில் ஏஐ ஏற்​படுத்​தும் தாக்​கம் குறித்து சென்னை ஐஐடி வெள்ளை அறிக்கை வெளி​யிட்​டுள்​ளது.

சென்னை ஐஐடி வாத்​வானி தரவு அறி​வியல் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு நிறு​வனத்​தின் கீழ் இயங்​கும் செயற்கை நுண்​ணறிவு பொறுப்பு மையத்தை சேர்ந்த ஆராய்ச்​சி​யாளர்​கள், இந்​தி​யாவில் வேலை​வாய்ப்​பு​களில் செயற்கை நுண்​ணறிவு ஏற்​படுத்​தும் தாக்​கம் குறித்து ஒரு வெள்ளை அறிக்​கையை தயாரித்​துள்​ளனர்.

ஐஐடி​யில் நடை​பெற்ற ஏஐ ஆளுமை தொழில்​துறை மாநாட்​டின்​போது ஐஐடி இயக்​குநர் வீ.காமகோடி இந்த வெள்ளை அறிக்​கையை வெளி​யிட்​டார்.

மனிதர்​களின் பணிகளை திறம்​படச் செய்ய ஏஐ எவ்​வாறு உதவு​கிறது? தற்​போதைய வேலை​வாய்ப்​பு​களை ஏஐ எவ்​வாறு மாற்​றியமைக்​கிறது? புதிய வேலை​வாய்ப்​பு​களை ஏஐ எவ்​வாறு உரு​வாக்​கு​கிறது? என்​பது குறித்து இந்த வெள்ளை அறிக்கை விரிவாக விளக்​கி​யுள்​ளது.

ஏஐ-யால் ஏற்​படும் வேலை​யிழப்பு குறித்த அச்​சம், புதிய வேலை​வாய்ப்​பு​கள் கிடைக்​காதது பற்​றிய கவலைகளை​யும் இந்த அறிக்கை ஆராய்​கிறது.

இந்​தி​யாவில் வேலை​வாய்ப்​பு​களில் ஏஐ ஏற்​படுத்​தும் தாக்​கத்தை பணி​யின் அடிப்​படை​யில் புரிந்​து​கொள்ள வேண்​டும் என அந்த அறிக்​கை​யில் வலியுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இது​குறித்து வாத்​வானி தரவு அறி​வியல் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு நிறு​வனம் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு பொறுப்பு மையத்​தின் தலை​வர் பேராசி​ரியர் பலராமன் ரவீந்​திரன் கூறும்​போது, “வேலை​வாய்ப்​பு​களை ஏஐ தொழில்​நுட்​பம் பறித்​து​விடும் என்று பொது​வாக சொல்​லப்​படும் கருத்து தவறு என்​பதை இந்த வெள்ளை அறிக்கை சுட்​டிக்​காட்​டு​கிறது.

வேலைகளில் பல​வித​மான பணிகள் உள்​ளன. அவற்​றில் சில​வற்றை மட்​டுமே ஏஐ-யால் செய்ய முடியும். இந்த மாற்​றங்​களால் பயன்​பெறு​வோர்-பாதிக்​கப்​படுவோர் யார் என்​ப​தையும் நாங்​கள் ஆராய்ந்​துள்​ளோம்” என்​றார்.

செயற்கை நுண்​ணறிவு பொறுப்பு மையத்​தின் ஆராய்ச்சி இயக்​குநர் கோகுல் எஸ்.கிருஷ்​ணன் கூறுகை​யில், “ஏஐ என்​பது தனிப்​பட்ட ஒரு பணியை செய்து முடிக்​கும். அது ஒட்​டுமொத்த தொழிலை​யும் செய்​யாது.

ஒரு பணியை ஏஐ செய்​வ​தால் அந்த வேலை காணா​மல் போய்​விடாது” என குறிப்​பிட்​டார். மூத்த ஆலோ​சகர் கே.எஸ்.வேங்​கடராகவன், ‘ஸ்ரீலதா- பிர​பாகர் ராகவன் தகவல், சமூக மையத்​தின்’ நிர்​வாகத் தலை​வர் வி.எஸ்.ஸ்ரீவித்யா ஆகியோர் பங்​கேற்​றனர்.

வேலைவாய்ப்பை ஏஐ பறிக்காது: சென்னை ஐஐடி வெள்ளை அறிக்கை வெளியீடு
சென்னையில் மின்வெட்டை தடுக்க 2,600 ஒப்பந்த ஊழியர்கள் நியமனம்: மின்வாரியம் நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in