எம்டெக் செமிகண்டக்டர் டெக்னாலஜி உட்பட புதிதாக 4 முதுநிலை பட்டப் படிப்புகள்: சென்னை ஐஐடி அறிமுகம்

எம்டெக் செமிகண்டக்டர் டெக்னாலஜி உட்பட புதிதாக 4 முதுநிலை பட்டப் படிப்புகள்: சென்னை ஐஐடி அறிமுகம்
Updated on
1 min read

சென்னை: எம்டெக் செமிகண்​டக்​டர் மெட்​டீரியல்ஸ் டெக்​னாலஜி, எம்டெக் ரொபோட்​டிக்ஸ் உட்பட புதி​தாக 4 முதுநிலை பட்​டப் படிப்​பு​களை சென்னை ஐஐடி இந்த ஆண்டு அறி​முகப்​படுத்​துகிறது.

இது தொடர்​பாக ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: மாறிவரும் தொழில்​நுட்ப சூழலுக்கு ஏற்ப சென்னை ஐஐடிபுதிய படிப்​பு​களை அறி​முகப்​படுத்தி வரு​கிறது.

அந்த வகை​யில், தற்​போது தொழில்​நுட்​பம், உற்​பத்​தி, ஆளுமை ஆகிய துறை​களில் தேவை​யான மனிதவளத்தை உரு​வாக்​கும் வகை​யில் எம்ஏ (பொது கொள்​கை), எம்டெக் செமிகண்​டக்​டர் மெட்​டீரியல்ஸ் டெக்​னாலஜி, எம்டெக் மெக்​கானிக்​கல் இன்​ஜினியரிங், எம்டெக் ரொபோட்​டிக்ஸ் ஆகிய 4 புதிய முதுநிலை பட்​டப் படிப்​பு​களை இந்த ஆண்டு அறி​முகப்​படுத்​துகிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

அதிக தேவை உள்ளது

புதிய படிப்​பு​கள் அறி​முகப்​படுத்​தப்​படு​வது குறித்து ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி கூறும்​போது, “தொழில் துறை​யினரின் தேவை​களை​யும் நாட்​டின் தொழில்​நுட்​பத் தேவை​களை​யும் பூர்த்தி செய்​யும் பணியை ஐஐடி தொடர்ந்து செய்து மேற்​கொண்டு வரு​கிறது.

அந்த வகை​யில், வளர்ந்து வரும் துறை​களுக்கு தேவைப்​படும் நிபுணர்​களை உரு​வாக்​கும் நோக்​கில் புதி​தாக இந்த 4 முதுநிலை படிப்​பு​களை இந்த ஆண்டு தொடங்​கு​கிறோம். இந்த படிப்​பு​களுக்கு அகில இந்​திய அளவில் மாணவர்​கள் சேரலாம்” என்​றார்.

ஐஐடி உலோக​வியல் மற்​றும் மெட்​டீரியல் இன்​ஜினியரிங் துறை​யின் தலை​வர் வி.சுப்​ரமணிய சர்மா கூறுகை​யில், “இந்​திய செமிகண்​டக்​டர் இயக்​கத்​துக்கு செமிகண்​டக்​டர் தொழில்​நுட்ப அறிவு கொண்ட நிபுணர்​கள் அதி​கள​வில் தேவைப்​படு​கின்​றனர்.

இதைக் கருத்​தில்​கொண்​டு, எம்டெக் செமிகண்​டக்​டர் மெட்​டீரியல்ஸ் டெக்​னாலஜி படிப்​புக்​கான பாடத்​திட்​ட​மானது செமிகண்​டக்​டர் துறை​யின் தேவையை​யும் செமிகண்​டக்​டர் நிபுணர்​களை உரு​வாக்​கும் நோக்​கத்​தை​யும் பூர்த்தி செய்​யும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

எம்டெக் செமிகண்டக்டர் டெக்னாலஜி உட்பட புதிதாக 4 முதுநிலை பட்டப் படிப்புகள்: சென்னை ஐஐடி அறிமுகம்
பறவைக் காய்ச்சல் எதிரொலி: கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா மூடல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in