பறவைக் காய்ச்சல் எதிரொலி: கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா மூடல்

பறவைக் காய்ச்சல் எதிரொலி: கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா மூடல்
Updated on
1 min read

சென்னை: கிண்டி சிறு​வர் பூங்காவில் பறவை​களுக்கு பறவைக் காய்ச்​சல் உறுதி செய்​யப்​பட்டுள்ள நிலை​யில், அப்பூங்கா தற்​காலிக​மாக மூடப்​பட்​டுள்​ளது.

சென்​னை​யில் குழந்​தைகளுக்கு முக்​கிய பொழுது​போக்கு இடமாக கிண்டி சிறு​வர் பூங்கா இருந்து வரு​கிறது. இதில் நாளொன்​றுக்கு சுமார் 2 ஆயிரம் பேரும், வார இறுதி நாட்​களில் சுமார் 5 ஆயிரம் பேரும் பார்​வை​யிட வரு​கின்​றனர்.

சென்னை அடை​யாரில் அண்​மை​யில் காகங்​கள் அதிக அளவில் இறந்து கிடந்​தன. அவற்றின் மாதிரி​களை சோதனைக்கு அனுப்​பிய​தில் பறவைக் காய்ச்​சலால் இறந்​தது உறு​தி​செய்​யப்​பட்​டது.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகரம் முழு​வதும் தீவிர கண்​காணிப்​புப் பணி​களை மாநக​ராட்​சி, கால்​நடை பராமரிப்​புத் துறை, பொது சுகா​தா​ரத் துறை அலு​வலர்​கள் மேற்​கொண்​டனர். அதன் பிறகு சென்​னை​யில் ஒரே நேரத்​தில் அதிக அளவில் பறவை​கள் இறப்பு இல்​லை.

இந்​நிலை​யில் கிண்டி சிறு​வர் பூங்காவில் சில பறவை​களுக்கு பறவைக் காய்ச்​சல் உறுதி செய்​யப்​பட்​டுள்​ள​தால் உடனடி​யாக அப்பூங்கா மூடப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக வனத்​துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கிண்டி சிறு​வர் இயற்கை பூங்கா உடனடி​யாக​வும் அடுத்த அறி​விப்பு வரும் வரை​யும் பொது​மக்​கள் வரு​கைக்கு மூடப்​படு​கிறது.

இப்பூங்காவில் உள்ள வேடந்​தாங்​கல் ஈரநிலப் பறவை​கள் கூண்​டில் சில பறவை​களுக்கு பறவைக் காய்ச்​சல் உறுதி செய்​யப்​பட்​டதைத் தொடர்ந்து தீவிர முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளும் பொருட்டு பூங்கா தற்​காலிக​மாக முடப்​படு​கிறது.

இந்​திய அரசால் வெளி​யிடப்​பட்ட “பறவைக் காய்ச்​சல் தடுப்​பு, கட்​டுப்​பாடு மற்​றும் கட்​டுப்​படுத்​தல் நடவடிக்​கைத் திட்​டம் (திருத்​தம் 2021)” வழி​காட்​டு​தல்​கள், முன்​னர் வழங்​கப்​பட்ட அறி​வுரைகள் ஆகியவை துறையின் மூலம்​ முறை​யாக பின்​பற்​றப்​பட்​டு வரு​கின்றன. இவ்​​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

பறவைக் காய்ச்சல் எதிரொலி: கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா மூடல்
பாலியல் வழக்கில் முன்னாள் டிஜிபியின் தண்டனை நிறுத்திவைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in