மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்க ஐஎஃப்எஸ் முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அழைப்பு

தமிழக அரசு பயிற்சி மையத்தில் ஏற்பாடு
மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்க ஐஎஃப்எஸ் முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அழைப்பு
Updated on
1 min read

சென்னை: ஐஎஃப்எஸ் முதன்​மைத் தேர்​வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்​களுக்கு அரசு பயிற்சி மையத்​தில் வரும் 17-ம் தேதி மாதிரி ஆளு​மைத் தேர்வு நடத்​தப்பட உள்​ளது.

எனவே, முதன்​மைத் தேர்​வில் வெற்​றி​ பெற்​றுள்ள மாணவர்​கள் இதில் பங்​கேற்க இன்று முதல் விண்​ணப்​பிக்​கலாம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, தமிழக அரசின் பயிற்​சித் துறை தலை​வர் எஸ்​.கோ​பால சுந்தர ராஜ் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: மத்​திய அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தால் (யுபிஎஸ்​சி) நடத்​தப்​படும் அகில இந்​திய குடிமைப் பணி​களுக்​கான தேர்​வு​களை எதிர்​கொள்​ளும் ஆர்​வலர்​களுக்​கு, தமிழக அரசின் அகில இந்​திய குடிமைப் பணித் தேர்​வுப் பயிற்சி மையத்​தில் முதல்​நிலைத் தேர்​வு, முதன்​மைத் தேர்வு மற்​றும் ஆளு​மைத் தேர்​வுக்கு பயிற்​சிகள் அளிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

தற்​போது, இம்​மை​யத்​தின் சார்​பில், இந்​திய வனப்​ பணி (ஐஎஃப்எஸ்) முதன்​மைத் தேர்​வில் வெற்றி பெற்ற தேர்​வர்​களுக்கு வரும் 17-ம் தேதி அன்று மாதிரி ஆளு​மைத் தேர்வு நடத்​தப்பட இருக்​கிறது.

இந்த மாதிரி ஆளு​மைத் தேர்​வில் பங்​கேற்க விரும்​பும் தேர்​வர்​கள் www.civilservicecoaching.com என்ற இணைய தளத்​தில் 13-ம் தேதி (இன்​று) முதல் 15-ம் தேதி மாலை 5 மணிக்​குள் பதிவு செய்ய வேண்​டும். விண்​ணப்ப விவரங்​களை பதிவு செய்து அவற்றை aicscc.gov@gmail.com என்ற மின்​னஞ்​சல் முகவரிக்கு அனுப்ப வேண்​டும்.

கூடு​தல் விவரங்​களுக்​கு, 044-24621475 என்ற தொலைபேசி எண், 93457 66957 என்ற வாட்​ஸ்​-அப் எண், aicscc.gov@gmail.com என்ற மின்​னஞ்​சல் மூல​மாக​வும் தொடர்பு கொள்​ளலாம். இவ்​வாறு அவர் தெரி​வித்துள்ளார்.

மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்க ஐஎஃப்எஸ் முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அழைப்பு
சென்னை | பாஸ்ட் புட் மாஸ்டர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in