

சென்னை: பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்..
தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு இருமுறை (ஜூன், டிசம்பர்) கணினி வழியில் நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான 2-ம்கட்ட யுஜிசி நெட் தேர்வு, டிசம்பர் 31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.