

கோப்புப் படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப்-1 முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேரடி அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுள்ள 160 பேரின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை இணையதளத்தில் காணலாம்.