‘சேர்க்கை குறைந்த அரசுப் பள்ளிகளை மூடமாட்டோம்' - அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் சான்றிதழ் வழங்கினார். அருகில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், அறங்​காவலர் ரமணி பாலசுந்தரம் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் சான்றிதழ் வழங்கினார். அருகில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், அறங்​காவலர் ரமணி பாலசுந்தரம் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்

Updated on: 
1 min read

வேலூர்: தமிழகத்​தில் மாணவர் சேர்க்கை குறைந்த அரசுப் பள்​ளி​களை மூட மாட்​டோம் என பள்​ளிக்​கல்​வித்​துறை அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

வேலூர் விஐடி பல்​கலைக்​கழகம் சார்​பில் வேலூர், ராணிப்​பேட்டை, திருப்​பத்​தூர் மற்​றும் திரு​வண்​ணா​மலை ஆகிய 4 மாவட்​டங்​களில் 2023-24, 2024-25 மற்​றும் 2025-26-ம் ஆண்​டுகளில் பொதுத் தேர்​வு​களில் அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்​ளி​களின் தலைமை ஆசி​ரியர்​களுக்​குப் பாராட்டு விழா நேற்று நடை​பெற்​றது.

விஐடி அண்ணா அரங்​கில் நடை​பெற்ற விழாவுக்கு தலைமை தாங்​கிய வேந்​தர் கோ.விசுவநாதன் பேசும்​போது, “தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களின் எண்​ணிக்கை அதி​கம் இருந்​தா​லும் அதன் தரத்தை உயர்த்​து​வதற்கு வேண்​டிய நட​வடிக்​கையை அரசு எடுக்க வேண்​டும். கடந்த 10 ஆண்​டுகளில் இந்​தியா முழு​வதும் 94,000 அரசுப் பள்​ளி​கள் மூடப்​பட்​டுள்​ளன.

அதேநேரம், 51,000 தனியார் பள்​ளி​கள் புதிதாக திறக்​கப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் 246 பள்​ளி​கள் மூடப்​பட்​டுள்​ளன. காரணம் மாணவர்​கள் இல்​லாதது​தான். 1,204 பள்​ளி​களில் மாணவர் சேர்க்கை இல்லை. அரசுப் பள்​ளி​களும் தனியார் பள்​ளி​களுக்கு சமமாக செயல்​பட என்ன செய்ய வேண்​டும் என்​பதை அமைச்​சர் ஆராய்ந்து நட​வடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார்.

நிகழ்ச்​சி​யில், சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற தமிழக பள்​ளிக் கல்​வித்​துறை அமைச்​சர் ராஜ்மோகன் பேசும்​போது, “தவெக அரசு பொறுப்​பேற்ற 6 மாதங்​களில் ஒரு அரசுப் பள்​ளியைக்​கூட மூட​வில்லை. மாணவர் சேர்க்கை குறைந்த அரசுப் பள்​ளி​களை மூட மாட்​டோம் என்​பதை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

யாரோ ஒரு ஏழை வீட்​டுக் குழந்​தையும் படிக்க வேண்​டும் என்​ப​தற்​காக ஒற்றை ஆசி​ரியருடன் ஒரு பள்​ளிக்​கூடம் காத்​திருக்​கிறது. ஒரு மாணவனுக்​காக அந்த அரசுப் பள்​ளி​களை நாங்​கள் மூட மாட்​டோம்; மூட​வும் விட மாட்​டோம்.

நடப்​பாண்​டில் பள்​ளிக்​கல்​விக்​காக ரூ.44,557 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. பள்ளி நிறைவு திட்​டத்​தின் கீழ் 3,734 அரசுப் பள்​ளி​களை மேம்​படுத்த ரூ.2,132 கோடி மதிப்​பில் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. 10,000 அரசுப் பள்​ளி​களில் தூய்மை குடிநீர், கழிப்​பறை பராமரிப்பு மற்​றும் பாது​காப்பை உறுதிப்​படுத்த சூப்​பர் கிளீன்,சூப்​பர் கேம்​பஸ் திட்​டத்​துக்​காக ரூ.139 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

விழா​வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 341 அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களைச் சேர்ந்த தலைமை ஆசி​ரியர்​களுக்கு ரூ.52 லட்​சம் மதிப்​பிலான நலத்​திட்ட உதவி​கள் வழங்​கப்​பட்​டன. இதில், விஐடி துணைத் தலை​வர்​கள் சங்​கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், அறங்​காவலர் ரமணி பாலசுந்​தரம் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

<div class="paragraphs"><p>வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் சான்றிதழ் வழங்கினார். அருகில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், அறங்​காவலர் ரமணி பாலசுந்தரம் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்</p></div>
மதுரை: பிரபல நகைக் கடையில் 35 கிலோ நகைகள் கொள்ளை

X