அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
Updated on
1 min read

சென்னை: தமிழக உயர்​கல்​வித் துறை செயலர் அருண்​ராய் வெளி​யிட்ட அரசாணை​: நடப்பு (2026-27) கல்வி ஆண்​டில் அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் தேவை​யுள்ள கலைப் பாடப் பிரிவு​களுக்​கும், ஆய்வக வசதிக்கு ஏற்ப அறி​வியல் பாடப் பிரிவு​களுக்​கும் 20 சதவீதம் கூடு​தலாக மாணவர்​களை சேர்க்க நிபந்​தனை​களு​டன் அனு​மதி அளிக்​கப்​படு​கிறது.

அதே​போல, அரசு உதவி​பெறும் கல்​லூரி​களில் தேவை​யுள்ள கலை, அறி​வியல் பாடப் பிரிவு​களில் அரசு உதவி பெறும் பாடப் பிரிவு​களுக்கு 15 சதவீத​மும், சுயநிதி பாடப்பிரிவு​களுக்கு 10 சதவீத​மும், தனி​யார் சுயநிதி கல்​லூரி​களில் கலை, அறி​வியல் பாடப் பிரிவு​களுக்கு 10 சதவீத​மும் கூடு​தலாக மாணவர்​களை சேர்க்க நிபந்​தனை​களு​டன் அனு​மதி அளிக்​கப்​படு​கிறது.

சம்​பந்​தப்​பட்ட பல்​கலைக்​கழகங்​களால் முதன்​முதலில் ஒப்​பளிக்​கப்​பட்ட மாணவர் சேர்க்​கை​யின் அடிப்​படை​யில் கூடு​தல் சேர்க்கை மேற்​கொள்​ளப்பட வேண்​டும். சம்​பந்​தப்​பட்ட பல்​கலைக்​கழகங்​களின் ஒப்​புதலும் பெறப்பட வேண்​டும். இந்த கூடு​தல் சேர்க்கை அனு​மதி நடப்பு கல்வி ஆண்​டுக்கு மட்​டுமே பொருந்​தும். தவிர, கூடு​தல் சேர்க்​கைக்​காக கூடு​தல் பணி​யிடங்​கள் கேட்​கக் கூடாது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி 3 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in