செயற்கை நுண்ணறிவு மூலம் வெப் டிசைனிங் பயிற்சி: கிண்டியில் 3 நாள் நடத்த அரசு ஏற்பாடு

செயற்கை நுண்ணறிவு மூலம் வெப் டிசைனிங் பயிற்சி: கிண்டியில் 3 நாள் நடத்த அரசு ஏற்பாடு
Updated on
1 min read

சென்னை: செயற்கை நுண்​ணறிவு மூலம் வெப் டிசைனிங் உரு​வாக்​குதல் குறித்​து, கிண்டியில் 3 நாள் பயிற்​சிக்கு தமிழக அரசு ஏற்​பாடு செய்​துள்​ளது. இன்​றைய டிஜிட்​டல் உலகில் ஒவ்​வொரு வணி​கத்​துக்​கும் இணை​யதளம் என்​பது இன்​றியமை​யாத தேவை​யாக உள்​ளது.

இதை கருத்​தில்​கொண்​டு, தொழில் முனை​வோர்​களுக்கு புதிய வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் நோக்​கில், கிண்டியில் செயல்​பட்டு வரும் தமிழக அரசின் தொழில் முனை​வோர் மேம்​பாடு மற்​றும் புத்​தாக்க நிறு​வனத்​தில், செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மூலம் இணை​யதளங்​களை வடிவ​மைப்​பது (வெப் டிசைனிங்) குறித்த பயிற்சி மார்ச் 4 முதல் 6-ம் தேதி வரை 3 நாட்​களுக்கு வழங்​கப்​படு​கிறது.

இதில் ஹெச்​.டி.எம்​.எல், சி.எஸ்​.எஸ்​-ன் அடிப்​படைகள், இணை​யதள வடிவ​மைப்​பின் முக்​கிய கோட்​பாடு​கள், செயற்கை நுண்​ணறிவு கருவி​களை பயன்​படுத்தி மிக எளிமை​யாக​வும், வேக​மாக​வும் இணை​யதளங்​களை வடிவ​மைக்​கும் நவீன முறை​கள் கற்​றுக்​கொடுக்​கப்​படும்.

பல்​வேறு வாய்ப்​பு​கள்

இத்​துடன், பங்​கேற்​பாளர்​கள் நேரடி​யாக தங்​களின் சொந்த இணை​யதளத்தை உரு​வாக்​கி, அதை இணை​யத்​தில் வெளி​யிடும் நடை​முறைப் பயிற்​சி​யும் வழங்​கப்​படும். மேலும், இணை​யதளங்​களைத் தேடு​பொறி​யில் முன்​னிலைப்​படுத்​தும் எஸ்இஓ முறை​கள் பற்​றி​யும் விளக்​கமளிக்​கப்​படும்.

பயிற்சி முடி​வில், ஐடி நிறு​வனங்​களில் வேலை​வாய்ப்​பு, ஃப்​ரீலான்ஸ் முறை​யில் இணை​யதள மேம்​பாட்​டுத் திட்​டங்​களை மேற்​கொள்​ளுதல் மற்​றும் சிறு தொழில்​களுக்​கான டிஜிட்​டல் சேவை வழங்​கும் வணி​கத்தை தொடங்​குதல் போன்ற பல்​வேறு வாய்ப்​பு​கள் குறித்து வழி​காட்​டப்​படும்.

இந்த பயிற்​சி​யில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, கணினி அறிவு கொண்ட 18 வயது நிரம்​பிய​வர்​கள் அனை​வரும் பங்​கேற்​கலாம். முன்​ப​திவு அவசி​யம். கூடு​தல் விவரங்​களுக்கு www.editn.tn என்ற இணை​யதளத்​தை​யும், 9360221280, 8668100181 என்ற எண்​களை​யும் தொடர்பு கொள்​ளலாம்.

செயற்கை நுண்ணறிவு மூலம் வெப் டிசைனிங் பயிற்சி: கிண்டியில் 3 நாள் நடத்த அரசு ஏற்பாடு
ஈரான் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in